கலசப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதி செய்து தர நடவடிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளுக்கு செய்து தரப்படும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும், மருத்துவமனை எதிரே சிமெண்ட் தளம் அமைத்து தர வேண்டும் என மருத்துவர் சவுத்ரி, எம்எல்ஏ-விடம் கோரிக்கை வைத்தார்.
இது குறித்து எம்எல்ஏ கூறுகையில், கலசபாக்கம் அரசு மருத்துவமனைக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என தமிழக முதல்வர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளேன், விரைவில் 100 படுக்கை வசதிகள் செய்து தரப்பட உள்ளது. அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றார். நிகழ்ச்சியில் மருத்துவர்கள், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவக்குமார் , மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu