வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கலசபாக்கம் நெசவாளர்கள்

வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கலசபாக்கம் நெசவாளர்கள்
X

வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கலசபாக்கம் நெசவாளர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நெசவாளர்களின் கண்ணீரை துடைக்குமா தமிழக அரசு?

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் சுமார் 3000 நெசவாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள். கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக நெசவாளர்கள் வேலைகள் எதுவுமின்றி, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் மிகுந்த சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அன்றாட வாழ்க்கைத் தேவைக்கு மிகவும் கஷ்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழக அரசு தங்களுக்கு நிவாரணம் அளித்து தங்கள் குடும்பங்களை காத்திட உதவி செய்ய வேண்டுமென கோரிக்கை மனுவாக முதல்வருக்கு அனுப்பி வைத்துள்ளனர். தங்களுடைய வாழ்வாதாரத்திற்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். தமிழக அரசு செவிசாய்க்குமா?

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!