பள்ளிகள் திறப்பு: அரசுப்பள்ளிகளில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

பள்ளிகள் திறப்பு: அரசுப்பள்ளிகளில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு
X
பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார்

கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் வருகின்ற ஒன்றாம் தேதி முதல் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக அங்கு உள்ள அடிப்படை வசதிகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் காலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆய்வு செய்த போது சேதமடைந்த பள்ளிக் கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வட்டாட்சியர் ஜெகதீசனிடம். இந்த ஆய்வின்போது ஒன்றியக் குழுத் தலைவர் அன்பரசி, பிடிஓக்கள், கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!