திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜமாபந்தி நிறைவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜமாபந்தி நிறைவு
X

வட்டாட்சியர் அலுவலகத்தில் மரக்கன்றுகளை நட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது.

கலசப்பாக்கம் வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவு பெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நல திட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அவர் பேசும் பொழுது தமிழ்நாடு முதல்வர் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆட்சி செய்து வருகிறார் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கடனுதவி கடன் தள்ளுபடி போன்றவற்றை வழங்கியது திமுக அரசு தான்.

எந்தக் கோரிக்கையாக இருந்தாலும் என்னிடம் நேரில் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என கூறினார்.

நிகழ்ச்சியில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ,வட்டாட்சியர் ராஜேஸ்வரி , தனி வட்டாட்சியர் மலர்கொடி , வட்ட வழங்கல் அதிகாரிகள் , ஒன்றிய குழு தலைவர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக வட்டாட்சியர் அலுவலகத்தில் மரக்கன்றுகளை எம்எல்ஏக்கள் நட்டனர்

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூரில் நடந்த ஜமாபந்தியில் 406 பேருக்கு ரூ.71 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் 3 நாட்கள் ஜமாபந்தி நடந்தது. திருவண்ணாமலை வருவாய் கோட்ட அலுவலர் மந்தாகினி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 698 மனுக்களை பெற்றார். இதில் 406 மனுக்களுக்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாடு நடந்தது.

ஒன்றிய குழு தலைவர்கள் கீழ்பென்னாத்தூர் அய்யாக்கண்ணு, துரிஞ்சாபுரம் தமயந்தி ஏழுமலை, தெற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் அன்பு, பேரூராட்சி தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் சாப்ஜான் வரவேற்றுபேசினார்.

விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு வருவாய்த்துறை சார்பில் வீட்டுமனை பட்டா 110 பேருக்கும், வட்ட வழங்கல் பிரிவு 150 பேருக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தில் 5 பேருக்கும் என மொத்தம் ரூ.71 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பீட்டில் 406 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இவை தவிர பட்டா மாற்றம், சாதிச்சான்று, வாக்காளர் அடையாள அட்டை, ஆதரவற்ற விதவை சான்று போன்றவையும் தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டது. முடிவில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

செங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தண்டராம்பட்டு பகுதியில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை கலந்து கொண்டு அனைத்து கிராம கலைஞர் வேளாண்மை வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட மக்கள் நல திட்ட உதவிகளை வழங்கினார்.

தாசில்தார் அப்துல் ரகூப் வரவேற்றார். இதில் தண்டராம்பட்டு, தானிப்பாடி, வாணாபுரம் ஆகிய உள்வட்டங்களை சேர்ந்த 63 கிராமங்களில் இருந்து 1133 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது விசாரணை செய்து 200 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story
ai solutions for small business