கலசபாக்கம் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு விழா

கலசபாக்கம் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு விழா
X

ஜமாபந்தி நிறைவு விழாவில் கோட்டாட்சியர் உரையாற்றினார்.

Tiruvannamalai News -கலசபாக்கம் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு விழாவில் 82 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

Tiruvannamalai News - கலசபாக்கம் தாலுகாவில் 3 நாட்கள் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் இருந்து 940 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 82 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 858 மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலசபாக்கம் எம்.எல்.ஏ தி.சரவணன்., ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா ஆகியோர் கலந்துகொண்டு 82 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

விழாவில் கலசபாக்கம் பகுதி விவசாயிகள் கலந்துகொண்டு பேசுகையில், கலசபாக்கம் ஒன்றியத்தில் இந்த ஆண்டு அளவுக்கு அதிகமான மழை பொய்ததின் காரணமாக நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது. இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். யூரியா தட்டுப்பாடு தொடர் கதையாகி வருகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதில் தாசில்தார் தட்சிணாமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மலர்கொடி மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story