ஆழ்துளை கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் ஆய்வு

ஆழ்துளை கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் ஆய்வு
X

மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை ஆய்வு செய்த  கூடுதல் கலெக்டர் .

திருவண்ணாமலை மாவட்டத்தில் கைவிடப்பட்ட 1,333 ஆழ்துளை கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கைவிடப்பட்ட 13 33 ஆழ்துளை கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார். சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் தச்சம்பாடி, ஓதலவாடி, மன்சூராபாத், ஆகிய கிராமங்களில் கூடுதல் கலெக்டர் வீர பிரதாப் சிங் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அனைவருக்கும் வீடு வழங்க கணக்கெடுப்பு பணிகள், அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தில் சிமெண்ட் சாலை, அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணிகள், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் தனிநபர் வீடு, உறிஞ்சு குழாய், பள்ளி சுற்றுச்சூவர், மாட்டு கொட்டகை, அமைக்கும் பணி, முன்னதாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் கின்னஸ் சாதனை படைக்க கைவிடப்பட்ட ஆழ்துளை குழாய் கிணறுகளை மழைநீர் சேகரிக்கும் மேல் நிரப்பு கட்டமைப்பு கட்டப்படும் பணிகளை கூடுதல் கலெக்டர் வீர் பிரதாப் சிங், நேரில்ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது பயிற்சி கலெக்டர் ரஷ்மிராணி, உதவி செயற்பொறியாளர் கோவிந்தன், ஒன்றிய குழு தலைவர் ராணி அர்ஜுனன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், இந்திராணி, ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட உடன் இருந்தனர்.

கலசபாக்கம் :

திருவண்ணாமலை மாவட்டத்தில் கைவிடப்பட்ட 13 33 ஆழ்துளை கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை இன்று டெல்லி குழுவினர் ஆய்வு செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திட கடந்த ஆண்டு கலெக்டர் முருகேஷ் மேற்கொண்ட முயற்சியால் ஒரே நேரத்தில் 1,113 பண்ணை குட்டைகள் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு உலக சாதனை படைத்தது.

தொடர்ந்து இரண்டாவது கட்டமாக கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளில் மாவட்டத்தில் 1,333 மழைநீர் சேகரிப்பு மீள் நிரப்பு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன்படி கலசபாக்கம் ஒன்றியத்தில் 85 மழை நீர் சேகரிப்பு மீள் நிரப்பு கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தலா ₹50 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்றுள்ள இப்பணிகளை இன்று முதல் 3ம் தேதி வரை டெல்லி குழுவினர் ஆய்வு செய்து, பணியின் தன்மை குறித்து அறிக்கை தயார் செய்ய உள்ளனர். இரண்டாவது கட்டமாக மழை நீர் சேகரிப்பு மீள் நிரப்பு பணியில் உலக சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் காலூர் ஊராட்சி மதுரா சின்னக்காலூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு மீள் நிரப்பு கட்டமைப்பு பணிகளை ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் ஆய்வு செய்தார். அப்போது மாவட்டத்திலேயே கலசபாக்கம் ஒன்றியத்தில் இப்பணியை சிறப்பாக முடித்து சாதனை படைத்து முன்மாதிரி ஒன்றியமாக திகழ வேண்டுமென அறிவுரை வழங்கினார்.

ஆய்வின்போது பிடிஓக்கள் ,ஒன்றிய கவுன்சிலர்கள் , ஊராட்சித் தலைவர் ஜெயக்கொடிகுமார், , பணி மேற்பார்வையாளர் அனந்தகுமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!