திருவண்ணாமலை அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமான பணி ஆய்வு
ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமான பணியை ஆய்வு மேற்கொண்ட துணை சபாநாயகர்
துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ரூ 4 கோடிமதிப்பீட்டில் கட்டுமான பணி நடைபெற்று வருவதை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் நேற்று புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ரூ 4 கோடியில் கட்டுமான பணி நடைபெற்று வருவதை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆய்வு செய்து பேசியதாவது:
பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மிகவும் பழுதான நிலையில் இருந்ததால் என்னிடம் கடந்த ஆண்டுக்கு முன்பு கோரிக்கைவைத்தனர். அதன் அடிப்படையில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கு உண்டான அரசாணை பிறப்பித்து ரூ 4 கோடி நிதி ஒதுக்கீடு செய்து புதிய கட்டுமான பணி துவங்கி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று விரைவில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் இந்த புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுமான பணிகளுடன் அலுவலகம் அருகில் பூங்காக்கள் அமைப்பதற்கும் இரும்பு கேட் கதவு அமைக்கும் பணியை ஆய்வு செய்தனர். அதன் பணிகளும் விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் , மாவட்ட ஊராட்சிகள் துணைத் தலைவர் பாரதி ராமஜெயம், ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, ஒன்றிய செயலாளர்கள் ராமஜெயம், அண்ணாமலை, பொதுக்குழு உறுப்பினர் பாலு, வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், இன்ஜினியர்கள் அருணா, தமிழரசி, பிரசன்னா, ஒன்றிய கவுன்சிலர் பார்வதி கோபாலகிருஷ்ணன், பஞ்சாயத்து தலைவர் பிரபாகரன், மாவட்ட ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் ஏழுமலை, மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அரசு அலுவலர்கள், திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu