/* */

உரக்கடை, உரக் கிடங்கு ஆகியவற்றில் வேளாண் துணை இயக்குநா் ஆய்வு

புதுப்பாளையம் பகுதியில் உரக்கடை, உரக் கிடங்கு ஆகியவற்றில் வேளாண்மை துணை இயக்குநா் ஆய்வு மேற்கொண்டாா்.

HIGHLIGHTS

உரக்கடை, உரக் கிடங்கு ஆகியவற்றில் வேளாண் துணை இயக்குநா் ஆய்வு
X

உரக்கடை, உரக் கிடங்கு ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்ட வேளாண்மை துணை இயக்குநா்.

புதுப்பாளையம் பகுதியில் உரக்கடை, உரக் கிடங்கு ஆகியவற்றில் வேளாண்மை துணை இயக்குநா் ஆய்வு மேற்கொண்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் வேளாண் அலுவலகத்துக்கு உள்பட்ட காஞ்சி, சி.நம்மியந்தல் பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியாா் உரக்கடை, உரக் கிடங்கு ஆகியவற்றில் வேளாண்மை துணை இயக்குநா் ஏழுமலை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க கிடங்குகள் அரசு மூலம் இறக்குமதி செய்த உர மூட்டைகள், அவை விவசாயிகளுக்கு முறையாக வழங்கப்பட்டுள்ளதா, மேலும், மீதம் உள்ள உர மூட்டைகள் சரியாக உள்ளனவா என வேளாண் துணை இயக்குநா் நேரில் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து தனியாா் உரக் கடைகளுக்கு சென்று இருப்பு பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிா, கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுகிா என ஆய்வு செய்தாா்.

மேலும், உரம் விற்பனையின் போது இணை பொருள்கள் விற்பனை செய்யக்கூடாது. கூடுல் விலைக்கு விற்பனை, கலப்பட உரம் விற்பனை கண்டறியப்பட்டால் உடனடியாக கடையின் உரிமம் ரத்து செய்ய்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தாா்.

வேளாண்மை உதவி இயக்குநா்கள் சரவணன் (திருவண்ணாமலை), பாலகிருஷ்ணன் (புதுப்பாளையம்) , வேளாண் அலுவலா் சிவசக்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

விவசாயிகள் வேளாண் சுற்றுலா

ஆரணி, சேத்துப்பட்டு, போளூர் ஒன்றிய பகுதிகளை சேர்ந்த 50 விவசாயிகள் வேளாண் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். மேற்கு ஆரணி ஒன்றியத்தின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் ஆத்மா திட்டத்தின் கீழ் வேளாண் பண்ணை எந்திரங்கள் தகவல் மையம் சார்பில் 50 விவசாயிகள் சென்னை தேசிய வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்திற்கு வேளாண் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இதில் சேத்துப்பட்டு, மேற்கு ஆரணி, போளூர் வட்டாரத்தை சார்ந்த விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். விவசாய பணிகளில் எந்திரங்களின் நன்மைகள் மற்றும் தேவைகள் எவ்விதம் பயன்படுத்துவது அதனுடைய திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிககப்பட்டது.

இதில் வேளாண்மை பொறியியல் துறை அதிகாரிகள் ஜீவா, லோகேஷ், மேற்கு ஆரணி ஒன்றிய வேளாண்மை உதவி இயக்குனர் செல்லதுரை, வேளாண்மை அலுவலர் கீதா, வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பாஸ்கரன், பிரேம் குமார் ஆகியோர் வேளாண் சுற்றுலாவில் விவசாயிகளுடன் சென்றுள்ளனர்.

Updated On: 3 Feb 2023 1:14 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  மூன்றாவது முறையாக மோடி மேஜிக்! டெய்லிஹண்ட் கருத்துக்கணிப்பு
 2. தமிழ்நாடு
  தேர்தல் கால சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு
 3. வீடியோ
  Free Bus கொடுத்து ஆட்டோக்காரர்களின் வாழ்வாதாரத்தை கெடுத்த திமுக !...
 4. வீடியோ
  Stalin ஒன்னும் செய்யல திமுக இருந்து என்ன புரியோஜனும் ! #public...
 5. இந்தியா
  தேர்தல் நெருங்கும் நேரத்தில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள்
 6. இந்தியா
  தேர்தல் விதிகளுக்கு அரசியல் கட்சிகள் இணக்கம்: தேர்தல் ஆணையம் திருப்தி
 7. கிணத்துக்கடவு
  ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி : உதயநிதி...
 8. வீடியோ
  Central Chennai-யில் பாஜகக்கு பெருகும் ஆதரவு மண்ணை கவ்வும் திமுக !...
 9. வீடியோ
  கீழ்த்தரமாக பேசும் Dayanidhi சென்னை மக்கள் குமுறல் ! #dmk #dayanidhi...
 10. வீடியோ
  திமுக பாஜக அதிமுக வெல்ல போவது யார் ? #dmk #admk #bjp #election...