கலசப்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு

தண்ணீர் பந்தலை திறந்து வைத்த சரவணன் எம்எல்ஏ மற்றும் அண்ணாதுரை எம்பி
கலசப்பாக்கம் அடுத்த வில்வாரணி நட்சத்திர கோவில் அருகே திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மக்கள் தாகம் தணிப்பதற்காக தண்ணீர் பந்தலை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தலைமை தாங்கினார் . நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை தண்ணீர் பிந்து பந்தலை திறந்து வைத்து பேசும்போது;
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக வெப்பநிலை மிகவும் அதிகமாக உள்ளது.
அதுவும் இப்பொழுது கத்திரி வெயில் தொடங்கியுள்ளதால் 108 டிகிரியை தாண்டியுள்ளது.
அதனால் மக்கள் வெளியே வருவதற்கு மிகவும் அச்சப்பட்டு உள்ளனர் .அவசியம் இருக்கும் பட்சத்தில் மக்கள் வெளியே வருகின்றனர். அவர்களுக்கு தாகம் கணிப்பதற்கும் வெப்பத்தை போக்கி சுத்தமான குடிநீர் வழங்குவதற்கும் இப்போது தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பந்தல் மூலம் மக்களுக்கு குடிநீர், மோர், தர்பூசணி, முலாம்பழம், இளநீர், பப்பாளிப்பழம், வெள்ளரிக்காய் ,கரும்பு ஜூஸ், பழ ஜூஸ் மற்றும் குளிர்பானங்கள் ஆகியவை மக்களுக்கு வழங்கி மக்களை வெப்பத்திலிருந்து மீட்டு அவர்களுக்கு நீராகாரப் பொருட்களை வழங்கி வருகிறோம்,
மேலும் மக்கள் வெப்ப நிலையில் பாதுகாப்பான முறையில் செல்ல வேண்டும். உடல் குறைபாடு கொண்ட மக்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் செல்ல வேண்டும். மக்கள் வெப்ப நேரத்தில் நீர் ஆகார பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அண்ணாதுரை எம்பி பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து கரும்பு ஜூஸ் போடும் இயந்திரத்தில் கரும்பு ஜூஸ் போட்டு பொதுமக்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் ,இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ், வழக்கறிஞர் சுப்ரமணியன், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் ,மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர்கள், மாவட்ட கவுன்சிலர்கள் ,ஒன்றிய குழு தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,கிளை செயலாளர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள் ,கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu