திருவண்ணாமலை அருகே மேம்படுத்தப்பட்ட மின் மாற்றிகள் தொடங்கி வைப்பு

திருவண்ணாமலை அருகே மேம்படுத்தப்பட்ட மின் மாற்றிகள் தொடங்கி வைப்பு
X

மின் மாற்றி தொடங்கி வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்ட மின் மாற்றிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

திருவண்ணாமல மாவட்டம் கீழ்பென்னாத்தூா், கலசப்பாக்கம் பகுதிகளில் ரூ.5 கோடியே 69 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட மின் மாற்றிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், வேங்கிக்கால் ஊராட்சியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மானக் கழகம் சாா்பில் ரூ.3 கோடியே 67 லட்சத்தில் மின்மாற்றி மேம்படுத்தப்பட்டது.

இதனை, சென்னையில் இருந்தபடியே காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.

அதேவேளையில், வேங்கிக்கால் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் , திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை , ஆகியோர் கலந்து கொண்டு மின் மாற்றியை இயக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், வட்ட மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் பழனிராஜு,மேற்பார்வை பொறியாளர் ராமு, வேங்கிக்கால் ஊராட்சித் தலைவா் சாந்தி தமிழ்ச்செல்வன் மற்றும் அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.

கீழ்பென்னாத்தூரில்.

இதேபோல, கீழ்பென்னாத்தூரை அடுத்த மங்கலம் பகுதியில் ரூ.2 கோடியே 2 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட மின் மாற்றி, வேளாண் உழவா் நலத்துறை சாா்பில் கீழ்பென்னாத்தூரில் ரூ.2 கோடியே 65 லட்சத்தில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடம் ஆகியவற்றையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தாா்.

அதனைத் தொடர்ந்து கீழ்பெண்ணாத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சரவணன், மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கலசப்பாக்கம்

கலசப்பாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூர் ஊராட்சியில் உள்ள துணை மின் நிலையத்தில் ரூபாய் 1.62 கோடி மதிப்பீட்டில் புதிய 16 எம் பி ஏ திறன் கொண்ட மின்மாற்றி முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கலசப்பாக்கம் ஆதமங்கலம் புதூர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்பரசி ராஜசேகர் , ஒன்றிய குழு தலைவர் தலைமையில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மின்மாற்றி திறந்து வைத்து கொண்டாடினர்.

அப்போது ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் கூறுகையில்

இப்பகுதியில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய வந்திருந்த கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணனிடம் இப்பகுதி மக்கள் இதற்கு முன்பு பல ஆண்டுகளாக புதிய மின் மாற்றி அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தோம். ஆனால் இதுவரை எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரும் அதை அமைத்துக் கொடுக்கவில்லை, தாங்களாவது இதனை செய்து கொடுங்கள் என கேட்டிருந்தனர். அதன் அடிப்படையில் எம் எல் ஏ இந்த ஆதமங்கலம் புதூர் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் புதிய மின் மாற்றி அமைத்து கொடுக்க வேண்டும் என சட்டமன்ற கூட்டத்திலும், பொதுப்பணித்துறை அமைச்சர் வேலுவிடமும், முதலமைச்சர் ஸ்டாலின் இடமும், மின்சார துறை அமைச்சரிடமும் கோரிக்கை வைத்திருந்தார்.

அந்த கோரிக்கையை ஏற்று அந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று இப்பொழுது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார்கள். இதன் மூலம் இப்பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களும் அனைத்து விவசாயிகளும் பயன்பெறலாம், மின்சாரம் துண்டிக்கப்படாமல் வழங்கப்படும், லோ வோல்டேஜ் பிரச்சினைகள் இனிமேல் வராது.

இதனைப் பெற்றுத் தந்த சட்டமன்ற உறுப்பினர் சரவணனுக்கு இப்பகுதி மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

அப்போது இப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும் , பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு அவர்களுக்கும், மின்சார துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கும் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணனுக்கும் நன்றி கூறி மகிழ்ந்தனர்.

Tags

Next Story
கோபி பாரியூரில் குண்டம் திருவிழா..! பக்தர்களின் உற்சாக பார்வையில் கடவுளின் அருளுடன்..!