கலசப்பாக்கத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு!

கலசப்பாக்கத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு!
X

புதிய கட்டிடங்களை திறந்து வைத்த சரவணன் எம்எல்ஏ

கலசப்பாக்கத்தில் புதிய கட்டிடங்களை எம்எல்ஏ திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தில் 6 ஊராட்சிகளில் 2 புதிய நியாய விலை கடை, 1 அங்கன்வாடி மையம், 1 மேல்நீர் தேக்க தொட்டி, 1 பயணியர் நிழற்குடை, 1 கலையரங்கம், 1 பகுதி நேர ரேஷன் கடை ஆகிய கட்டிடங்களை ரூ 1.5 கோடி மதிப்பீட்டில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் சுப்பிரமணியம், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவகுமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பு தலைவர் வித்யா பிரசன்னா, அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சரவணன் எம்எல்ஏ புதிய கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பேசியதாவது,

கிராம மக்களின் கோரிக்கை ஏற்று கலசபாக்கம் அடுத்த தாங்கல் பகுதியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை, சிறுவள்ளூ ர் ஊராட்சியில் ரூ 10.70 லட்சத்தில் புதிய நியாய விலை கடை, ஆதமங்கலபுதூரில் ரூ 9.99 லட்சத்தில் புதிய பயணியர் நிழற்குடை, வெங்கடம்பாளையம் ஊராட்சியில் ரூ 49.90 லட்சத்தில் புதிய மேல்நீர் தேக்க தொட்டி, மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் ரூ 13.16 லட்சத்தில் புதிய நியாய விலை கடை, மேல்சோழங்குப்பத்தில் ரூ 14 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மையம், மேல்சோழங்குப்பத்தில் 7 லட்சத்தில் புதிய கலையரங்கம், ஆகிய 6 ஊராட்சிகளில் பல்வேறு கட்டிடங்களை திறந்து வைத்துள்ளோம்.

இதன் மூலம் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு தொலைதூரம் சென்று வாங்க வேண்டிய நிலை மாறி அருகாமையில் புதிய நியாய விலை கடை மற்றும் பகுதிநேர ரேஷன் கடை பொருட்களை சிரமின்றி பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதேபோல் மக்கள் குடிநீர் பற்றாக்குறை போக்க புதிய மேல்நீர் தேக்க தொட்டி அமைத்து மக்கள் பயன்படுத்தி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் நல்ல முறையில் படிப்பதற்காக புதிய அங்கன்வாடி மையத்தையும் இப்போது திறந்துவைக்கப்பட்டுள்ளது. மேலும் திராவிட மாடல் ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களும் சலுகைகளும் மக்களை தேடி மக்களின் இல்லங்களை தேடி செல்கிறது. அதன் மூலம் மக்கள் பயன் பெற்று வருகின்றனர். இன்னும் பல்வேறு திட்டங்கள் தமிழக மக்களுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், து ணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவும், சட்டமன்ற உறுப்பினராகிய நானும் உங்களுக்காக பல்வேறு திட்டங்களை செய்து கொடுப்பேன் என்று சரவணன் எம்எல்ஏ பேசினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் பட்டம்மாள் முனுசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சக்தி ராமமூர்த்தி, ராஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் ஒன்றிய குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ,துணை தாசில்தார்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் சரவணன், சுப்பராயன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜா, கிளைச் செயலாளர் செந்தில், மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story
மாணவனின் துயர சம்பவம்: கிணற்றில் குளிக்கும் போது உயிரிழப்பு - மரக்கட்டை விழுந்து விபத்து