திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் திறப்பு

ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை குத்துவிளக்கினை ஏற்றி துவக்கி வைத்த துணை சபாநாயகர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக 4 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைசெயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக திருவண்ணாமலை மாவட்டம், போளூர், துரிஞ்சாபுரம்,, திருவண்ணாமலை மற்றும் பெரணமல்லூர் ஆகிய பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்ததைதொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், முன்னிலையில் குத்துவிளக்கினை ஏற்றி வைத்து அலுவலக பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் ரூபாய் 3.50 கோடி மதிப்பீட்டிலும், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் ரூபாய் 3.455 கோடி மதிப்பீட்டிலும், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் ரூபாய் 3.435 கோடி மதிப்பீட்டிலும், பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் ரூபாய் 3.63 கோடி மதிப்பீட்டிலும் எனமொத்தம் 14 கோடி மதிப்பீட்டிலான 4 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் தினம் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
மேற்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்ததைதொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், முன்னிலையில் போளூர், துரிஞ்சாபுரம், திருவண்ணாமலை ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்களில் குத்துவிளக்கேற்றி அலுவலக பயன்பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்நிகழ ச்சியில் தமிழ்நாடு துணைத் தலைவர் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் உன்னத திட்டங்களை செயல்படுத்தி நல்லாட்சியை நடத்தி வருகிறார். பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கும் அரசு அலுவலகங்கள் அ னைத்தை யு ம் நவீனப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு 4 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்களை திறந்து வைத்துள்ளார்கள். தற்பொழுது திறந்து வைக்கப்பட்டுள்ள அலுவலகங்கள் அனைத்தும் பொதுமக்கள் அலுவலர்களை எளிதில் அணுகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்புணர்வுடன் பொதுமக்களுக்கு சேவைகளை மேற்கொள்ளவேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் போளூர் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெருமாள், துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு தலைவர் தமயேந்தி ஏழுமலை, திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu