புதுப்பாளையம் ஒன்றியத்தில் அரசுக் கட்டடங்கள் திறப்பு
புதிய அரசு கட்டிடங்களை திறந்து வைக்க எம்எல்ஏ சரவணன்
திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியத்தில் புதிதாக கட்டப்பட்ட அரசுக் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன.
கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் வீரானந்தல் மேல்குப்பம் பகுதியில் அங்கன்வாடி கட்டடம், நியாய விலைக் கடை கட்டடம், முன்னூா் மங்கலம் கிராமத்தில் கிராம செயலக கட்டடம், மேல்முடியனூா், படிஅக்ரகாரம் கிராமங்களில் அங்கன்வாடி கட்டடங்கள் புதிதாக கட்டப்பட்டன.
இதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புதுப்பாளையம் ஒன்றிய குழுத் தலைவா் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ சரவணன் கலந்துகொண்டு புதிய கட்டடங்களை குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில் ஒன்றிய ஆணையா் லட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் நிா்மலா, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பவ்யா ஆறுமும், முனியப்பன், ஊராட்சி மன்றத் தலைவா் பூங்காவனம் ஜெயராஜ், முன்னாள் தலைவா் இளங்கோவன், புதுப்பாளையம் பேரூராட்சி துணைத் தலைவா் சீனுவாசன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலா் கலந்து கொண்டனா்.
தேவிகாபுரம் -மன்சுராபாத் சாலைப் பணிக்கு பூமி பூஜை
சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் -மன்சுராபாத் சாலை விரிவாக்கப் பணியை அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ பூமி பூஜை செய்து தொடங்கிவைத்தாா்.
தேவிகாபுரம் -ஆத்துரை-மன்சுராபாத் சாலை மிகவும் பழுதடைந்தும், குண்டும் குழியுமாக உள்ளதால் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் விரிவாக்கப் பணிக்காக ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு நிதியில் 2023-2024ஆம் நிதியாண்டில் ரூ.5 கோடியே 22 லட்சத்தில் பூமி பூஜை செய்யப்பட்டது.
இதில், போளூா் எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி கலந்து கொண்டு பூஜை செய்து தொடங்கிவைத்தாா்.
நெடுஞ்சாலைத் துறை கோட்ட உதவிப் பொறியாளா் திருநாவுக்கரசு, உதவிப் பொறியாளா் வேதவள்ளி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கோவிந்தராஜ், ஒன்றியச் செயலா் ராகவன் மற்றும் அதிமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu