கலசப்பாக்கத்தில் ரூபாய் மூன்று கோடி மதிப்பில் கட்டிடங்கள் திறப்பு

கலசப்பாக்கத்தில் ரூபாய் மூன்று கோடி மதிப்பில் கட்டிடங்கள் திறப்பு
X

வளர்ச்சிப் பணி கட்டிடங்களை திறந்து வைத்த  கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் 

கலசபாக்கம் ஒன்றியத்தில் ரூபாய் மூன்று கோடி மதிப்பிலான கட்டிடங்கள் எம்எல்ஏ திறந்து வைத்தார்

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் ரூபாய் மூன்று கோடியில் வளர்ச்சிப் பணி கட்டிடங்களை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் சுப்பிரமணியன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .கூட்டமைப்பு தலைவர் வித்யா பிரசன்னா அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கலசப்பாக்கம் எம் எல் ஏ சரவணன், கலசப்பாக்கம் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி பணி கட்டிடங்களை திறந்து வைத்து பேசியதாவது;

கடந்த 10 ஆண்டு ஆட்சியில் எந்த ஒரு வளர்ச்சி பணியும் இந்த கலசப்பாக்கம் தொகுதியில் நடைபெறவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் கலசப்பாக்கம் தொகுதியில் நடைபெற்று வருகிறது.

செய்யாற்றின் குறுக்கே நான்கு உயர்மட்ட பாலங்கள் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் இருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் செய்யாற்றின் குறுக்கே நான்கு உயர்மட்ட பாலங்கள் அமைப்பதற்கு பூமி பூஜை செய்து அதன் பணிகள் விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிந்ததும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும்.

அதேபோல் கலசப்பாக்கம் ஒன்றியத்தில் 8, 2 வகுப்பறை பள்ளி கட்டிடங்கள் திறப்பு விழா, 5 பொது விநியோக நியாய விலை கடை திறப்பு விழா, 3 அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழா, நான்கு ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா, ஒரு கிராம செயலக கட்டிட சிறப்பு விழா, சமையலறை கட்டிட திறப்பு விழா, தானிய கிடங்கு கட்டிட திறப்பு விழா ஆகிய 14 வளர்ச்சிப் பணிகள் கட்டிடங்கள் ரூபாய் மூன்று கோடி மதிப்பீட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த வளர்ச்சி பணிகளும் திராவிட மாடல் ஆட்சியில் தான் அதிக அளவு நடைபெற்று வருகிறது.

மேலும் பெண்களுக்காக மகளிர் உரிமைத் தொகை திட்டம் ,பெண்கள் உயர்கல்வி படிப்பதற்கு புதுமை பெண் திட்டம் என மாணவர்களுக்கு பெண்களுக்கும் பல திட்டங்களை நமது முதல்வர் வழங்கி வருகிறார். பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி, பெண்கள் பேருந்தில் இலவச பேருந்து பயணம், குழந்தைகள் சத்தான உணவை எடுத்துக் கொண்டு நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக காலை சிற்றுண்டி திட்டம் என மாணவர்களுக்கும் பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் வழங்கி வருகிறார். இன்னும் பல்வேறு திட்டங்களை தமிழகம் முதல்வர் தமிழக மக்களுக்காக வழங்க உள்ளார் என சரவணன் எம்எல்ஏ பேசினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர்கள், ஒன்றிய குழு துணை தலைவர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், துணை அமைப்பாளர்கள் ,அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!