ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சமுதாய நல கட்டிடங்கள் திறப்பு

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சமுதாய நல கட்டிடங்கள் திறப்பு
X

சமுதாய நல கட்டிடத்தை குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் உடன் சரவணன் எம்எல்ஏ

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சமுதாய நல கட்டிடங்கள், காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்.

கலசபாக்கம் அடுத்த அருணகிரி மங்கலம் ஊராட்சியில் ரூ 86 லட்சத்தில் புதிய சமுதாய கூடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், குத்துவிளக்கு ஏற்றி மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த அருணகிரி மங்கலத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக புதிய சமுதாயக்கூடத்தை ரூ 86 லட்சத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட மேலாளர் தாட்கோ ஏழுமலை, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சாந்தி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவகுமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் சுப்பிரமணியம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசியதாவது.

இந்த கலசபாக்கம் பகுதியான தென்மாதி மங்கலம் , அருணகிரி மங்கலம், கோவில்மாதிமங்கலம், சிறு வள்ளூர் , கேட்டவரம்பாளையம், கடலாடி, ஆகிய ஊராட்சிகளில் சமுதாயக்கூடம் இல்லாததால் எங்கள் பகுதியில் புதிய சமுதாயக்கூடம் அமைத்துக் கொடுக்க வேண்டும் சட்டமன்ற உறுப்பினர் சரவணனிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையின் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடமும், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடமும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரிடமும் கோரிக்கை வைத்து மாநில நிதி மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பில் ரூ 86 லட்சத்தில் புதிய சமுதாயக்கூடத்தை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தாட்கோ மூலம் இந்த சமுதாய கூடத்தை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை சார்பிலும்தாட்கோ மூலம் இந்த சமுதாயக்கூடத்தை இப்போது மக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் தொடங்க வைத்துள்ளார். இதன் மூலம் ஏழை எளிய மக்கள் சமுதாயக் கூட்டங்களைதேடி அலைய வேண்டாம். இந்த சமுதாயக்கூடத்தின் மூலம் சுலபமான முறையில் சுப நிகழ்ச்சிகளை செய்வதற்கு இந்த சமுதாயக்கூடம் பெரும் ஒரு வரப்பிரசாதமாக உங்களுக்கு அமையும் என்பதையும் அதே போல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் தினம் தினம் வழங்கி வருகிறார்.

அதில் இந்த சமுதாயக்கூடம் ஒன்று மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் முதலமைச்சரும் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினரும் உங்களுக்காக பெற்று கொ டுத்து வருகிறார் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாமலை, தாசில்தார் ராஜராஜேஸ்வரி, தனி தாசில்தார் முனுசாமி, ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்ரமணியம், மாவட்ட கவுன்சிலர் பட்டம்மாள் முனுசாமி, ஊராட்சி மன்ற தலைவர் வித்யா பிரசன்னா, ஒன்றிய கவுன்சிலர்கள் கலையரசி துரை, சென்னன், மஞ்சுளா சுதாகர், முனியாண்டி, அரசு கூடுதல் வழக்கறிஞர் கிருஷ்ணராஜ், மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business