அரசு வீடு வழங்கும் திட்டத்தில் லஞ்சம் கேட்டால் உடனடியாக நடவடிக்கை; எம்எல்ஏ எச்சரிக்கை

அரசு வீடு வழங்கும் திட்டத்தில் லஞ்சம் கேட்டால் உடனடியாக நடவடிக்கை; எம்எல்ஏ எச்சரிக்கை
X

நிகழ்ச்சியில் பேசிய சரவணன் எம்எல்ஏ

அரசு வீடு வழங்கும் திட்டத்தில் லஞ்சம் கேட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ எச்சரித்துள்ளார்.

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 116 பயனாளிகளுக்கு ரூ 92.80 லட்சத்தில் வீடுகள் பழுது பார்த்தல் பணிக்கான அரசு ஆணையை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக அரசு வழங்கும் வீடுகள் பழுது பார்த்தல் பணிக்கான அரசு ஆணையை சரவணன் எம்எல்ஏ வழங்கி பேசியதாவது:-

தமிழக அரசின் மூலம் தமிழக மக்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல திட்டங்களை தமிழக மக்களுக்காக வழங்கி வருகிறது. அதில் இந்த வீடுகள் பழுதுபார்த்தல் பணிக்கான அரசு ஆணையை வழங்குகிறோம். இதில் 116 பயனளிகளுக்கு வீடுகள் பழுது பார்க்கும் ஆணையை வழங்கப்படுகிறது. அதில் ரூ 92.80 லட்சத்தில் வீடுகள் பழுது பார்ப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அதன் மூலம் ஏழை எளிய மக்கள் பயனடையலாம்.

மேலும் இந்த வீடுகள் பழுதுபார்த்தல் பணிக்கான ஆணையை பெறுவதற்கும் மற்றும் தற்போது வீடுகள் பழுது பார்ப்பதற்கு உண்டான நிதி ஒதுக்கீட்டை பெறுவதற்கோ யாராவது லஞ்சம் கேட்டால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், அவர்கள் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதியாகவும் யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் அதனால் மக்கள் நீங்கள் தைரியமாக உங்கள் வீடுகள் பழுது பார்க்கும் பணியை பெற்று வீடு பழுது பார்க்கலாம். மேலும் இன்னும் வீடு பழுது பார்க்கும் பணிக்கான ஆணையை 167 பயனாளிகளுக்கு அரசாணை வழங்கப்பட உள்ளது. அந்த அரசணையினை நானே வந்து உங்களுக்கு வழங்குவேன் என்று கூறினார்.

மேலும் இந்த திட்டங்கள் சலுகைகள் அனைத்தும் தமிழக ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசின் திட்டத்தை முழுமையாக பயனடைய வேண்டும் என்பதற்காக இந்த திட்டங்களை வழங்கி அதன் மூலம் ஏழை எளிய மக்கள் பயன்பெறவேண்டும் என்பதற்காக வழங்கப்பட்டு வருகிறது. இதில் யாராவது லஞ்சம் கேட்டால் உடனடியாக அவர்கள் பதவிகள் பறிக்கப்படும் என்றும் கூறினர். அத்துடன் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் 310 பயனர்களுக்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு வழங்க உள்ளது. அப்பொழுது கூட யாராவது லஞ்சம் கேட்டாலோ பில்லு கொடுக்க முடியாது என்று மிரட்டினாலோ எந்த நேரத்திலும் என்னிடம் கூறுங்கள் தொலைபேசி மூலமாகவோ இல்லை கடிதம் ஆகவோ இல்லை நேரிலோ எந்த நேரத்திலும் என்னிடம் கூறுங்கள் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அதற்குண்டான தண்டனை கட்டாயம் வழங்கப்படும் என்று சரவணன் எம்எல்ஏ கூறினர்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்ரமணியம், வட்டார வளர்ச்சி அலுவல ர் அண்ணாமலை, வட்டார வளர்ச்சி அலுவலர் வேலு, மாவட்ட கவுன்சிலர் பட்டம்மாள் முனுசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் பிச்சாண்டி, மஞ்சுளா சுதாகர், லட்சுமி பன்னீர்செல்வம், செண்பகவல்லி, முனியாண்டி, தணிகைமலை, பாண்டியன், சென்னன், கூட்டமைப்பு தலைவர் வித்யா பிரசன்னா, ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வி பிச்சாண்டி, செந்தில்குமார், சுப்புராயன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ், அவைத் தலைவர் ராமமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசு, கிளைச் செயலாளர் செந்தில், மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!