கலசபாக்கம் அருகே குடும்ப தகராறில் 2-வது மனைவி அடித்துக்கொலை

கலசபாக்கம் அருகே குடும்ப தகராறில் 2-வது மனைவி அடித்துக்கொலை
X
குடும்ப தகராறில் 2-வது மனைவியை விறகு கட்டையால் அடித்துக் கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த கப்பலூர் மேட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் விவசாயி. இவரது முதல் மனைவி இறந்து விட்டதால், வளர்மதி (வயது 45) என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு அஜித்குமார் என்ற மகனும், சந்தியா என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு நிலத்தில் உள்ள கொட்டகையில் இருந்தபோது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த துரைராஜ் விறகு கட்டையால் வளர்மதியின் தலையில் அடித்ததால், படுகாயம் அடைந்த வளர்மதி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்து உடனே துரைராஜ் தப்பி ஓடிவிட்டார்.

இதுபற்றி அவரது மகள் சந்தியாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, படுகாயமடைந்த வளர்மதியை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கலசபாக்கம் போலீசார், தப்பி ஓடிய துரைராஜை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!