திருவண்ணாமலையில் குட்கா பொருட்களை காரில் கடத்தி சென்ற கணவன்-மனைவி கைது

திருவண்ணாமலையில் குட்கா பொருட்களை காரில் கடத்தி சென்ற கணவன்-மனைவி கைது
X
திருவண்ணாமலை அருகே 35 கிலோ குட்கா பொருட்களை காரில் கடத்தி சென்ற கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் குட்கா, கஞ்சா, சாராயம் விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் அவரது உத்தரவின் பேரில் திருவண்ணாமலை அருகில் உள்ள மேல்பாலானந்தல் பகுதியில் மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நசுரூதின் மற்றும் ஏட்டுகள் சின்னதுரை, மாசிலாமணி, பலராமன், முதல்நிலை காவலர் மோகன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமடக்கி போலீசார் சோதனை நடத்தினர்.

காரில் சோமாசிபாடியை சேர்ந்த ஜான்பாஷா மற்றும் அவரது மனைவி ஹஜீரா ஆகியோர் இருந்தனர். மேலும் சோதனை நடத்திய காரில் சுமார் 35 கிலோ எடையுள்ள தமிழக அரசினால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் ஆகும்.

இதையடுத்து அவர்களை போலீசார் மங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் குட்கா பொருட்களை கடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக காரில் கடத்தி சென்றது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் கணவன்-மனைவி இருவரையும் கைது செய்தனர். மேலும் கார் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!