சமுதாயக் கூடங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைப்பு!
சமுதாயக்கூடங்களின் சாவிகளை மகளிர் குழு தலைவிகளிடம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் சமுதாய கூட கட்டிடத்தினை பொது மக்களின் பயன்பாட்டிற்கு ஆதிதிராவிடர் மகளிர் சுய உதவிக்குழுக்களின் தலைவரிடம் ஒப்படைத்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அருணகிரி மங்கலம் மற்றும் வாசுதேவன்பட்டு ஊராட்சிகளில் தாட்கோ மூலம் கட்டப்பட்ட சமுதாய கூட கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்காக அந்தந்த ஊராட்சிகளில் வசிக்கும் ஆதிதிராவிடர் மகளிர் சுய உதவிக்குழு தலைவர் அவர்களிடம் ஒப்படைத்தார். திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், புதுப்பாளையம் ஒன்றியம், அருணகிரிமங்கலம் ஊராட்சியில் ரூ.86.00 லட்சம் மதிப்பில் சமுதாயகூட கட்டிடம் மற்றும் வாசுதேவன்பட்டு ஊராட்சியில் ரூ.55.92 லட்சம் மதிப்பில் தாட்கோ மூலம் கட்டி முடிக்கப்பட்ட சமுதாயக் கூட கட்டிடங்கள் 148.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் காணொலி காட்சி மூலம் திறந்துவைக்கப்பட்டது.
மேலே குறிப்பிட்டுள்ளபடி, தமிழ்நாடு முதலைமைச்சரால் திறந்துவைக்கப்பட்ட சமுதாய கட்டிடத்தை அந்தந்த பகுதி சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் மக்கள், கூட திருமண நிகழ்ச்சி, மஞ்சள் நீராட்டு, பிறந்தநாள் விழா போன்றபல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திகொள்ள மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
அருணகிரிமங்கலம் ஊராட்சியில் உள்ள சமுதாய கூட கட்டிடத்தினை, அருணகிரி மங்கலம் ஊராட்சியில் வசிக்கும் ஆதிதிராவிடர் மகளிர் சுயஉதவிக்குழு தலைவர் கவிதா என்பவரிடத்திலும், வாசு தேவன்பட்டு ஊராட்சியில் உள்ள சமுதாய் கட்டிடத்தினை, வாசுதேவன்பட்டு ஊராட்சியில் வசிக்கும் ஆதிதிராவிடர் மகளிர் சுய உதவிக்குழு தலைவர் செந்தமிழ்செல்லி என்பவரிடத்திலும் இக்கட்டிடங்களின் சாவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன், ஒப்படைத்தார். இந்த கட்டிடங்களை அந்தந்த பகுதியில் உள்ள ஆதிதிராவிட சுய உதவிக்குழு உறுப்பினர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படுவதால், இக்கட்டிடங்களை வாடகை விடுவதின்மூலம் மூலம் வரப்பெறும் தொகையினை கொண்டு இந்த சமுதாய கூட கட்டிடங்களை நல்ல முறையில் பராமரித்துக்கொள்ளவும்,
இதன மூலம் கிடைக்கும் வருவாயினை அந்தந்த பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிட மகளிர் சுய உதவிக்குழு பயன்படுத்திக்கொண்டு இவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த சமுதாய கூட கட்டிடங்களை ஆதிதிராவிடர் மகளிர் சுயஉதவிக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட மேலாளர் (தாட்கோ) ஏழுமலை, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சாந்தி, உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu