கலசப்பாக்கம் அருகே கார் மீது அரசு பேருந்து மோதல்: இரண்டு பேர் உயிரிழப்பு

கலசப்பாக்கம் அருகே கார் மீது அரசு பேருந்து மோதல்: இரண்டு பேர் உயிரிழப்பு
X
கலசப்பாக்கம் அருகே கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே காா் -அரசுப் பேருந்து நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், பாடியந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஞானசேகரன் . இவரது மனைவி வளா்மதி . அதே கிராமத்தைச் சோ்ந்த அறிவழகன் மனைவி ஜெயந்தி , இவா்களின் மகள் ரிதன்யா . இவா்கள் நான்கு பேரும் காரில், சேத்துப்பட்டு வட்டம், ஊத்தூா் கிராமத்தில் உறவினரின் துக்க நிகழ்வுக்காக சென்று விட்டு பாடியந்தலுக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். தீம்மச்சூா் கிராமத்தைச் சோ்ந்த கோபிநாத் காரை ஓட்டினாா்.

திருவண் ணா மலையிலிருந்து போளூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்து தென்பள்ளிப்பட்டு அடுத்த காலணி பகுதியில் சென்ற பொழுது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதாமல் இருக்க திருப்பியபோது அரசு பேருந்து ஓட்டுனர் கட்டுப்பாட்டில் இருந்து எதிரே வந்த கார் மீது மோதியதில் அருகிலுள்ள கடைக்குள் புகுந்தது. இதில் காரின் முன் பக்கம் அப்பளம் போல் நொறுங்கியதில் காரின் ஓட்டுனர் மற்றும் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த வளர்மதி ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து வந்த கலசப்பாக்கம் போலீசார் உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் இருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காரின் பின்பகுதியில் பயணம் செய்த ஞானசேகர், ஜெயந்தி மற்றும் அவரது குழந்தை ஆகியோருக்கு சிறு காயம் ஏற்பட்டு அவர்கள் இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

அதே போன்று இரு சக்கரத்தில் வந்து விபத்தில் சிக்கிய வேலு என்பவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளுடன் காரில் சிக்கிய ஓட்டுனர் மற்றும் வளர்மதியை அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி இறந்தவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த கலசப்பாக்கம் காவல்துறையினர் அரசு பேருந்து ஓட்டுனர் லோகநாதன், கைது செய்து அவரிடம் விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
நைட்ல இதெல்லாம் சாப்பிட கூடாதா...? அச்சச்சோ !.. இது தெரியாம இருந்துடீங்களே !