போளூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு
பைல் படம்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த செம்மியமங்கலம் கிராமத்தில் வசிப்பவர் புகழேந்தி. இவருடைய மனைவி கீதா. இவர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு பிரியதர்ஷினி என்ற பெண்குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் தாய் கீதா உயிரிழந்துள்ளார். பின்னர் தந்தை புகழேந்தி பிரியதர்ஷினியை வளர்த்து வந்துள்ளார்.
பிரியதர்ஷினி அருகிலுள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாணவி பிரியதர்ஷினிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். அவருக்கு உள்ளூரில் உள்ள மருத்துவர்களிடம் சிகிச்சை பார்த்து வந்துள்ளனர். மேலும் பிரியதர்ஷினிக்கு நாளடைவில் உடல்நிலை மோசமான நிலையில் இருந்துள்ளார். உடனடியாக மாணவி பிரியதர்ஷினியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு பிரியதர்ஷினியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் உள்ளது தெரியவந்தது. தொடர்ந்து மாணவி பிரியதர்ஷினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. திடீரென நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி பிரியதர்ஷினி உயிரிழந்துள்ளார். மாணவியின் உடலை தற்போது அவருடைய சொந்த ஊரில் வைக்கப்பட்டுள்ளது.
5ஆம் வகுப்பு பள்ளி மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மின் வேலியில் சிக்கி மூதாட்டி உயிரிழப்பு
செங்கத்தை அடுத்த இளங்குண்ணி பகுதியில் உள்ள கல்லடாவி கிராமத்தைச் சேர்ந்தவா் ரேணு , இவா், அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் பருத்தி சாகுபடி செய்திருந்தாா். பருத்தி பயிா்களை இரவு நேரத்தில் காட்டுப் பன்றிகள் வந்து சேதப்படுத்திவிட்டுச் சென்றதாக தெரிகிறது.
இதனால், பருத்தி பயிரை பாதுகாக்க ரேணு விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்து மாலை 6 மணிக்குப் பிறகு மின் இணைப்பு கொடுத்து வருவாராம்.
இந்த நிலையில், மாலை மின் வேலியில் மின் இணைப்பு கொடுத்துவிட்டு வந்துள்ளாா். பின்னா், இரவு 8 மணியளவில் அந்த வழியாக விவசாய நிலத்தில் இருந்து வீட்டுக்கு வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மனைவி வேடியம்மாள் மின் வேலியில் சிக்கி உயிரிழந்தாா்.
விவசாய நிலத்துக்குச் சென்ற வேடியம்மாள் வீடு திரும்பாததால் உறவினா்கள் தேடிச் சென்றபோது, அவா் மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மேல்செங்கம் போலீஸில் வேடியம்மாள் மகன் துரை புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து வேடியம்மாள் உடலை மீட்டு கூறாய்வுக்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu