ஜமுனாமரத்தூரில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 4 பேர் காயம்

ஜமுனாமரத்தூரில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 4 பேர் காயம்
X

5 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தத வேன்.

ஜமுனாமரத்தூரில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 4 போ் காயம் அடைந்தனர்.

புதுச்சேரியில் இருந்து வேனில் 26 பேர் சுற்றுலாவிற்கு திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் மலைக்கு வந்தனர்.

பற்றைக்காடு கிராமம் அருகில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி அருகில் இருந்த 5 அடி ஆழமுள்ள பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இதில், 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் எந்தவித காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஜமுனாமரத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்த 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஜமுனாமரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!