பீமன் அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை

பீமன் அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை
X
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் பீமன் அருவியில் தண்ணீர் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் செல்ல வனத்துறை தடைவிதித்துள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் பீமன் அருவியில் தண்ணீர் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அருவி அருகே செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கபட்டிருப்பதாக வன அலுவலர் கூறினார்.

கடந்த இரண்டு மாதங்களாக போளூரில் அதிக அளவு மழை பதிவாகி வருகிறது . கடந்த சில நாட்களாக ஜவ்வாது மலையில் இரவு நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஜவ்வாது மலையில் பல்வேறு காட்டாறுகள், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்ததன் காரணமாக காட்டுப்பகுதியில் அமைந்துள்ள பீமன் அருவியில் தண்ணீர் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து தடுப்பு கம்பிகளை தாண்டி வெள்ளம் வருவதால் ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வரும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இதுகுறித்து வன அலுவலர் குணசேகரன் கூறுகையில் பீமன் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் அருவி பகுதியில் காற்றின் வேகமும் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare