செண்பகத்தோப்பு அணை திறக்கப்பட்டது
செண்பகத்தோப்பு அணையை கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன் திறந்து வைத்தார்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள செண்பகத்தோப்பு அணை முழு கொள்ளளவு எட்டியதால் 1000 கன அடி நீரை சட்டமன்ற உறுப்பினர் சரவணன் திறந்து திறந்துவைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே படவேடு செண்பகத் தோப்பு அணையில் ஜவ்வாது மலை அடிவாரத்தில் கடந்த 10 தினங்களாக கனமழை பெய்து வருவதால் செண்பகத்தோப்பு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் முழு கொள்ளளவான 64 அடியில் தற்பொழுது 57 அடி வரை நீர் தேங்கி உள்ளது.
இதனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையை திறக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். அதனால், படவேடு , சந்தவாசல், ஆரணி ஆகிய கமண்டல நதி கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் நேற்று மற்றும் இன்று காலையும் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில், இன்று செண்பகத்தோப்பு அணை 57 அடி கொள்ளளவை எட்டியதை அடுத்து, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், செண்பகத்தோப்பு அணையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அணையில் உள்ள 3 மதகுகளில் தண்ணீரை திறந்துவைத்தார்.
இந்த அணையை திறப்பதன் மூலம், ஆரணி, செய்யாறு, ஆற்காடு ஆகிய பகுதிகளில் உபரி நீரானது சென்றடைவதால் 45 ஏரிகள் நிரம்பும். இதனால் சுமார் 20 ஆயிரம் ஏக்டர் விவசாய நிலத்திற்கு பாசன வசதி பெறும் என்றும் கோடை காலங்களில் குடிநீர் பற்றாக்குறை தீர்ந்துவிடும் என்று இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் , வருவாய் துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu