கலசப்பாக்கம் தாலுகா அலுவலகம் முன் விவசாயிகள் நூதன போராட்டம்

கலசப்பாக்கம் தாலுகா அலுவலகம் முன் விவசாயிகள் நூதன போராட்டம்
X
விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்.
கலசப்பாக்கம் தாலுகா அலுவலகம் முன்பு தலை கீழாக நின்று விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்.

கலசப்பாக்கம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினா் நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகாவிற்கு உட்பட்ட மேல்சோழங்குப்பம், பட்டியந்தல், கட்டவரம், அருணகிரிமங்கலம், லாடவரம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரி கால்வாய் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை உடனடியாக அகற்றி, சம்பா பயிர் செய்வதற்கு ஏதுவாக இருக்கும் வகையில் நீர்ப்பிடிப்பு ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் கலசபாக்கம் தாலுகா அலுவலகத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சில விவசாயிகள் தலைகீழாக நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கோரிக்கை மனுக்களையும் தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகளிடம் அவர்கள் வழங்கினர்.

மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி போராட்டம்

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, திருவண்ணாமலையில் நாம் தமிழா் கட்சியினா் நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே, நாம் தமிழா் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட மகளிா் பாசறை சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பாசறை மாநில ஒருங்கிணைப்பாளா் பிரகலதா ராம் தலைமை வகித்தாா். 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஒப்பாரி வைத்து, மதுப்புட்டிகளுக்கு தூக்கிட்டும், மதுப்புட்டிகளை கழுத்தில் மாலையாக அணிந்தும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, 2018 பிப்ரவரி முதல் 2022 வரை மது போதையில் வாகனம் ஓட்டியதால் 1,108 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 262 பேர் இறந்துள்ளனா். பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே மதுக் கடைகள் அமைக்கப்பட்டு இருப்பதால் மாணவ-மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். எனவே, தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினா். ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai healthcare products