விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

கலசப்பாக்கதில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டம்
கலசபாக்கம் அடுத்த தென் பள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம், ஊராட்சிகள் உதவி இயக்குனர் லட்சுமி நரசிம்மன் தலைமையில் நடைபெற்றது. வேளாண் உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் ,வட்டாட்சியர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசுகையில் மேல்சோழங்குப்பம் கிராமத்தில் உள்ள மிருகண்ட அணைக்கு செல்லும் சாலைகளை சீர் அமைப்பதுடன் நீர் வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும். கூட்டுறவு கடன் சங்கங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயிகளின் பெயர் பட்டியலை பொதுமக்களின் பார்வைக்கு அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருபத்தி நான்கு மணி நேரமும் மருத்துவர்கள் பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
சேத்துப்பட்டு விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.
உதவி வேளாண்மை துணை இயக்குனர் நாராயணமூர்த்தி தலைமை தாங்கினார், வட்டாட்சியர் கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் சுரேஷ் குமார் கலந்து கொண்டார்.
இதில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசுகையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை வழங்கப்பட்டு வந்தது. அதனை தற்போது 10 மணி முதல் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது, தற்போது ஏரி குளங்கள் எல்லாம் நிரம்பி உள்ளது விவசாயிகள் சிரமம் இல்லாமல் விவசாயம் செய்ய மும்முனை மின்சாரத்தை பழையபடி மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu