கலசபாக்கத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்

கலசபாக்கத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்
X

குறை தீர்வு கூட்டத்தில் பேசிய விவசாயிகள்

கலசப்பாக்கம் பகுதியில் விவசாய குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு ஊராட்சியில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கம் மையத்தில் விவசாய குறை தீர்வு கூட்டம் உதவி இயக்குனர் ஊராட்சிகள் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.

அதில் பேசிய, விவசாயிகள் சென்ற ஆண்டுகளில் எந்த கோரிக்கையும் சரியான முறையில் விவசாயிகளுக்கு முழுமையாக நிறைவேற்ற வில்லை, அதனால் இந்த ஆண்டு முதல் கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர் .

அதில் அரசு வழங்கும் கிசான் திட்டம் மூலம் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் தலா ரூபாய் 2000 வழங்கப்பட்டது . ஆனால் நிறைய விவசாயிகளுக்கு கிசான் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நிவாரண உதவி கிடைக்கவில்லை. அதேபோல் நீர்நிலைப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும், நீர்நிலை புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் விவசாயிகள் நீர் பாசனம் மூலம் முழுமையாக பயனடைவார்கள் என விவசாயிகள் கோரிக்கை வைத்து பேசினர்.

அதிகாரிகள் யாரும் சரி வர வருவதில்லை

கலசப்பாக்கம் விவசாயக்குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான, விவசாய குறை தீர்வு கூட்டம் விவசாயிகளின் குறை போக்குவதற்கு தான், தவிர விவசாயிகளை அலட்சியப்படுத்துவதற்காக இல்லை. ஏனென்றால் இந்த விவசாய குறை தீர்வு கூட்டத்திற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் யாரும் சரியாக வருவதில்லை . அதிகாரிகள் சிலர் விவசாய குறை தீர்வு கூட்டத்தை புறக்கணித்து வருகின்றனர். அதேபோல் விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான அறுவடை நேரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து அதன் மூலம் விவசாயிகள் முழுமையாக பயனடைய வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் உத்தரவு.

ஆனால் அறுவடை நேரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அதிகாரிகளின் அலட்சியத்தால் சரியான முறையில் திறப்பதும் இல்லை, இயங்குவதுமில்லை. அதனால் அறுவடை நேரம் முடிந்த பிறகு இப்பொழுது நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கிறார்கள். அறுவடை முடிந்த பிறகு விவசாயிகள் எப்படி பயனடைவார்கள், இதன் மூலம் வியாபாரிகள் தான் பயனடைந்து வருகிறார்கள் . அரசாங்கம் அறிவிக்கும் திட்டத்தை மக்களுக்கும் விவசாயிகளுக்கும் சரியான முறையில் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசமாக பேசினர்.

மேலும் 100 நாள் வேலை மக்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய உதவிகள் அனைத்தும் உண்மையான விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறினர்.

கூட்டத்தில் தாசில்தார் ராஜராஜேஸ்வரி, தனி தாசில்தார் முனுசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் விவசாயிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!