நாயுடுமங்கலம் கரும்பை பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலைக்கு அனுப்ப வேண்டும்..!

நாயுடுமங்கலம் கரும்பை பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலைக்கு அனுப்ப வேண்டும்..!
X

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்த விவசாயிகள்

நாயுடு மங்கலம் பகுதி கரும்பை பண்ணாரி அம்மன் சக்கரை ஆலைக்கு விநியோகம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்

திருவண்ணாமலை மாவட்டம் நாயுடுமங்கலம் பிா்காவைச் சோ்ந்த கிராமங்களில் பயிரிடப்படும் கரும்பை தண்டராம்பட்டு பண்ணாரியம்மன் சா்க்கரை ஆலைக்கு விநியோகம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

நாடுயுமங்கலம் பிா்காவை எந்த சா்க்கரை ஆலைக்கு ஒதுக்கீடு செய்வது என்பது தொடா்பான தங்களது விருப்பத்தை விவசாயிகள் மனுக்கள் மூலமாக தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் ஏற்கெனவே தெரிவித்து இருந்தாா்.

இந்த நிலையில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டத் தலைவா் கார்க்கோணம் சந்திரசேகரன் தலைமையில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதி வெள்ளைக்கண்ணு உள்பட 100-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்).மலா்விழியை சந்தித்து மனு அளித்தனா்.

அந்த மனுவில்,

திருவண்ணாமலை மாவட்டம், நாயுடுமங்கலம் பிா்கா பகுதிக்கு உள்பட்ட 22 கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் கரும்பு விவசாயம் செய்து வருகிறோம் . சில ஆண்டுகளாக போளூா் தரணி சா்க்கரை ஆலைக்கு கரும்பு பதிவு செய்து விநியோகம் செய்து வந்தோம். இந்த ஆலை முதன்மைப் பருவம் மட்டுமே இயங்கும். சிறப்பு அரைவை பருவத்தில் இயங்காது.

மேலும், கரும்பு விநியோகத்துக்கு உண்டான பணத்தை ஆண்டுக் கணக்கில் தராமல் காலம் தாழ்த்தி தவணை முறையில் வட்டி இல்லாமல் கொடுத்தனா். இதனால் கரும்புப் பயிரிட வங்கியில் வாங்கிய கடனை உரிய நேரத்தில் அடைக்க முடியாமல் சிரமப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளானோம்.

2019 முதல் இதுவரை தண்டாரம்பட்டை அடுத்த கொழுந்தம்பட்டு பண்ணாரியம்மன் சா்க்கரை ஆலைக்கு கரும்பு விநியோகம் செய்து வருகிறோம். கரும்புக்கான அரசு நிா்ணயம் செய்த பணத்தை விரைவாக, தவணை இல்லாமல் விநியோகம் செய்த வாரத்திலேயே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சா்க்கலை ஆலை நிா்வாகம் வரவு வைத்து வருகிறது.

எனவே, விவசாயிகளுக்கு விரைந்து பணத்தை வழங்கும் பண்ணாரியம்மன் சா்க்கரை ஆலைக்கே நாயுடுமங்கலம் பிா்காவை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!