Begin typing your search above and press return to search.
செங்கம் நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் மீது விவசாயிகள் புகார்
செங்கம் அடுத்துள்ள கடலாடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளை பதிவு செய்வதில்லை என புகார்
HIGHLIGHTS

நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் மீது விவசாயிகள் புகார்
செங்கம் அடுத்துள்ள கடலாடி பகுதியில் சில தினங்களுக்கு முன்பு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இந்நிலையில் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளை பதிவு செய்வதில்லை என புகார் விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.
விவசாயிகளின் நெல் மூட்டைகளை பதிவு செய்யாமல் வியாபாரிகள் கொண்டுவரும் மூட்டைகளை பதிவு செய்துகொள்வதாக விவசாயிகள் கூறுகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்