ஜவ்வாது மலையில் ஒற்றைக் கொம்பு யானை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை

ஜவ்வாது மலையில் ஒற்றைக் கொம்பு யானை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை
X

ஒற்றை கொம்பு யானை

ஜவ்வாது மலையில் ஒற்றைக் கொம்பு யானை நடமாடுவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரில் இருந்து கடந்த ஆறு மாதம் முன்பு, திருப்பத்தூர் மார்க்கமாக சென்ற ஒற்றை கொம்பு காட்டு யானை மீண்டும், நேற்று ஜமுனாமரத்தூர் காட்டுப்பகுதிக்கு வந்தது ஆலங்காயம் வனப்பகுதியில் இருந்து திருவண்ணாமலை வனக்கோட்டம் ஜமுனாமரத்தூர் வனப்பகுதிக்கு சாலை வழியாக வந்துள்ளது.

தற்போது கோமுட்டேரி அருகேயுள்ள வீரப்பனூர் காப்புக்காடு பகுதியில் உள்ளது. மக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாத இந்த யானையின் நடமாட்டத்தை, ஜமுனாமரத்தூர் வனச்சரக அலுவலர் குணசேகரன், வனவர் கிருஷ்ண மூர்த்தி, வனக்காப்பாளர்கள் திருமலைவாசன், பிரசன்ன மூர்த்தி, நித்தியானந்தம், அழகுமணி ஆகியோர் குழு கண்காணித்து வருகிறது. யானை நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
why is ai important to the future