பைக் ஓட்டி ஓட்டு கேட்ட அ.தி.மு.க. வேட்பாளர்

பைக் ஓட்டி  ஓட்டு கேட்ட அ.தி.மு.க. வேட்பாளர்
கலசப்பாக்கம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் பைக் ஓட்டி ஓட்டு சேகரித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி, ஜமுனாமரத்தூர் மலை பகுதியில் மலைவாழ் மக்களிடம் அ.தி.மு.க வேட்பாளரும் தற்போதைய எம்.எல்.ஏவுமான பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார்.

அதிமுக தொண்டர்கள் வாக்கு சேகரிப்பதற்காக பைக்குகளில் திரண்டனர். அதிமுக தொண்டர்களின் பைக்குகள் முன்னாள் அணிவகுத்து செல்ல, திறந்தவெளி வாகனத்தில் நின்றவாறு மலைவாழ் மக்களிடம் வேட்பாளர் பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார். வெயில் அதிகமாக இருந்ததால், தொண்டர்களை மகிழ்ச்சியூட்ட திறந்தவெளி வாகனத்தில் இருந்து இறங்கி பைக்கை வேட்பாளர் ஓட்டினார். தொண்டர்களோடு தொண்டராக வேட்பாளர் களமிறங்கியதால் அனைவரும் உற்சாகம் அடைந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story