விவசாய வேலை செய்து ஓட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்

விவசாய வேலை செய்து ஓட்டு கேட்ட   அதிமுக வேட்பாளர்
X
கலசப்பாக்கம் தொகுதியில் விவசாய வேலை செய்துகொண்டிருந்த பெண்களுக்கு உதவி செய்து அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏவும், தொகுதியின் அதிமுக வேட்பாளருமான பன்னீர்செல்வம் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். புதுப்பாளையம் ஒன்றியம் வடமாத்தூர் கிராமம், அண்ணாமலை நகர் பகுதிக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது விவசாய பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் அதிமுக அரசின் சாதனைகளுக்கான துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்குகள் சேகரித்தார். அவரும் விவசாய பணிகளில் ஈடுபட்டார்.

மேலும் பாமகவின் 40 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு வன்னியர் சமூகத்தினருக்கு அதிமுக அரசினால் கிடைத்த 10.5% இட ஒதுக்கீட்டை மறக்காமல் எடுத்துக்கூறினார். அதிமுக அரசால் கொண்டு வரப்பட்ட மக்களின் திட்டங்களை திமுகவினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதையும் கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.


Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு