கலசப்பாக்கம் பகுதியில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு
பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்ட தேர்தல் பார்வையாளர்
கலசப்பாக்கம் பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் வாகன பரிசோதனையின் மூலம் எவ்வளவு தொகைகள் பிடித்துள்ளீர்கள் என்பதை செலவின பார்வையாளர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் வாகன பரிசோதனை மூலம் எவ்வளவு தொகைகள் பிடித்துள்ளனர், உங்களுக்கு மேற்கொண்டு என்னென்ன வசதிகள் தேவை, ஏன் இதுவரை கலசப்பாக்கம் பகுதியில் ரூபாய் ஒன்று கூட பிடிப்படாமல் இருக்கிறது , என்ன காரணம் என்று பல்வேறு கேள்விகளை செலவின பார்வையாளர் குக்ரீத் வல்லியா, அதிகாரிகளிடம் கேள்விகளை எழுப்பி ஆய்வு செய்து பேசினார்.
மேலும் வாகன பரிசோதனை செய்வது இன்னும் தீவிரப்படுத்தி வாகனங்களை தீவிரமாக கண்காணியுங்கள் ,பரிசோதனை செய்யுங்கள், இரு சக்கர வாகனம், 4 சக்கர வாகனம், லாரி மற்றும் கண்டெய்னர்கள் போன்ற அனைத்து வாகனங்களையும் முழுமையாக பரிசோதனை செய்யுங்கள் . மேலும் 50,000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகை வைத்திருந்தால் உடனடியாக கொள்முதல் செய்யுங்கள். பின்னர் ஆவணம் சரியாக இருந்தால் விட்டு விடுங்கள், இல்லை என்றால் தேர்தல் ஆணையத்தின் மூலம் அந்த தொகையை அதிகாரிகளிடம் தெரிவித்து கருவூலத்தில் செலுத்துங்கள்.
ஆய்வின்போது மாவட்ட தேர்தல் செலவின கண்காணிப்பாளர் பெருமாள், தேர்தல் உதவி ஆய்வாளர் மற்றும் ஆதிதிராவிடர் நல அலுவலர் சாந்தி, தாசில்தார் ராஜேஸ்வரி ,தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அரசு அலுவலர்கள், காவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
ஆரணி மக்களவைத் தொகுதியில் உள்ள பதட்டமான வாக்குச்சாவடியான வடகசாத்து ஊராட்சி தொடக்கப்பள்ளி மையத்தை தேர்தல் காவல் பார்வையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ,போளூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் பதட்டமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆரணி கண்ணப்பன் தெரு நகராட்சி தொடக்கப்பள்ளி, வடுகசாத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தச்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டன.
இந்த வாக்குச்சாவடி மையங்களை ஆரணி தேர்தல் காவல் பார்வையாளர் பட்டுலா கங்காதர், ஆய்வு செய்தார். அப்போது வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பாலசுப்பிரமணியன், ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், வட்டாட்சியர் மஞ்சுளா ,மண்டல துணை வட்டாட்சியர் தேவி, கிராமிய காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தேர்தல் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu