புதிதாக அமைய உள்ள காவல் நிலையத்தை ஆய்வு செய்த காவல் துணை கண்காணிப்பாளர்

புதிதாக அமைய உள்ள காவல் நிலையத்தை ஆய்வு செய்த காவல் துணை கண்காணிப்பாளர்
X

புதியதாக அமைய உள்ள காவல் நிலையத்தை மாவட்ட காவல்துறை  துணை கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார்

கலசப்பாக்கம் அருகே புதியதாக அமைய உள்ள காவல் நிலையத்தை மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலு காவில் உள்ள ஆதமங்கலம் புதூரில் மின்சாரத்துறை அலுவலகம் அருகாமையில் புதிதாக அமைய உள்ள காவல் நிலையத்தை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நல்லு ஆய்வு செய்து பேசுகையில்,

புதிய காவல் நிலையம் அமையும் வரை தற்காலிக கட்டடத்தில் காவல்துறை பணி நடைபெற வேண்டும். அதுவரை தற்காலிக கட்டிடத்தை அமைப்பதற்கு ஆய்வு செய்து போதுமான இட வசதி போதுமான அடிப்படை வசதிகள் அனைத்தும் சரியாக உள்ளதா மேலும் தேவையான அடிப்படை வசதிகளை அமைப்பதற்கு உண்டான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

விரைவில் இந்த புதிய அரச கட்டடம் அமைத்து அதில் காவல் நிலையம் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்படும் அதுவரை இந்த தற்காலிக கட்டடத்தில் காவல் நிலையம் செயல்படும். அதேபோல் இந்த பகுதியில் காவல்துறை மூலம் எந்த புதிய காவல் நிலையம் அமைவது மிகப்பெரிய ஒரு வாய்ப்பு இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி நீங்கள் பாதுகாப்பான முறையில் இருக்கலாம் என்பதையும் ஆய்வு செய்து மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நல்லு ஆய்வின் போது கூறினார்.

ஆய்வின்போது காவல் துணை ஆய்வாளர் மற்றும் காவலர்கள், ஊராட்சி தலைவர் செல்வம், வழக்கறிஞர் முருகன், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற அலுவலக அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!