துரியோதனன் படுகளம் தீமிதி திருவிழா..!

துரியோதனன் படுகளம் தீமிதி திருவிழா..!
X

 ஸ்ரீ திரௌபதி அம்மன் அக்னி வசந்த விழாவில் நடைபெற்ற துரியோதனன் படுகளம் தீமிதி திருவிழா 

கலசப்பாக்கத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் அக்னி வசந்த விழாவில் துரியோதனன் படுகளம் தீமிதி திருவிழா நடைபெற்றது

கலசப்பாக்கம் தொகுதி துரிஞ்சாபுரம் அடுத்த கமலபுத்தூர் ஊராட்சியில் பழமை வாய்ந்த ஆலயமான ஸ்ரீ திரௌபதி யம்மன் சமேத தர்மராஜா திருக்கோவிலில் அக்னி வசந்த திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் துரியோதனன் படுகளம் தீமிதி திருவிழா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த கமலபுத்தூர் ஊராட்சியில் பழமை வாய்ந்த ஆலயமான திரௌபதியம்மன் சமேத தர்மராஜா திருக்கோவிலில் அக்னி வசந்த விழா கடந்த 20 நாட்களுக்கு முன்பு கொடி ஏற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்றது.

மேலும் பாரத சொற்பொழிவு மற்றும் இரவு நேரங்களில் மகாபாரத கதையில் வரும் தெருக்கூத்து நாடகங்கள் என தினந்தோறும் விழாக்கள் நடைபெற்று வந்தது. இரவு நேரங்களில் சாமி வீதி உலா வருவது திரௌபதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக அக்னி வசந்த விழாவின் முக்கிய நாளான நேற்று 21ம் நாளை முன்னிட்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையடுத்து பாஞ்சாலி சபதம் நிகழ்வையும் துரியோதனனை வதம் செய்யும் காட்சியை தத்துரூபமாக நாடக கலைஞர்கள் நடித்து காட்டி வந்தனர். அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை 5 மணி அளவில் தீமிதி திருவிழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் கமலபுத்தூர், கார்குணம், லடாவரம் ஆகிய 30 க்கு மேற்பட்ட கிராம மக்கள் சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

நி க ழ் ச் சி யி ல் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன், ,மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி ராமஜெயம், ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை ஒன்றிய செயலாளர்கள் , பொதுக்குழு உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர் கமல், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சேட்டு மற்றும் கோவில் உபயோதாரர்கள் , துரிஞ்சாபுர,ம் கலசப்பாக்கம், போளூர், சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் , மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் , பங்கேற்றனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil