பருவத மலையில் பௌர்ணமி கிரிவலத்திற்கு குவிந்த பக்தர்கள்

பருவத மலையில் பௌர்ணமி கிரிவலத்திற்கு குவிந்த பக்தர்கள்
X

பருவதமலை உச்சிக்கு ஏறிச் சென்ற பக்தர்கள்

கலசப்பாக்கம் அருகே பருவத மலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலத்தில் ஆடி பௌர்ணமி என்பதால் பிரசித்தி பெற்ற பருவதமலை மல்லிகார்ஜுனேஸ்வரர் சமேத பிரம்மாம்பிகை தாயாரை தரிசனம் செய்வதற்காக 4560 அடி உயரம் கொண்ட பருவதமலையை தொடர்ந்து இரண்டு நாட்களாக மக்கள் மலை சுற்றியும் மலை மீது ஏறியும் சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே கலசப்பாக்கம் தாலுக்கா தென் மகாதேவ மங்கலத்தில் பிரசித்தி பெற்ற பருவதமலை அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில் ஸ்ரீ பிரம்மராம்பிகை சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு பல மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பௌர்ணமிக்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பருவதமலைக்கு வருகை தந்தனர். ஆடிப் பௌர்ணமி நிறைவடைந்த நிலையிலும் நேற்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து வலை உச்சிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். .அரோகரா தோஷத்துடன் பருவதமலை உச்சிக்கு சென்று சாமி தரிசனம் செய்து பருவத மலையை விட்டு கீழ இறங்கி வந்தனர். பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே அன்னதானம் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டிருந்தது. நேற்று பக்தர்கள் யாரும் மலையின் உச்சியில் தங்குவதற்கு அங்கு அனுமதிக்கப்படவில்லை .

4560 அடி உயரமுள்ள பர்வதமலை ஏறி செல்லும் பக்தர்கள் படிக்கட்டுகள், பாறைகள், செங்குத்தான கடப்பாரை படி , ஆகாய படி , ஏணி படி என பல்வேறு படிகளை கடந்து மலை ஏறிச் சென்று தரிசனம் செய்ய வேண்டும்.

பருவதமலை உச்சிக்கு செல்லும் பக்தர்கள் நலன் கருதி மலையடி வாரத்திலும் , பர்வத மலையின் உச்சியில் உள்ள கோயில் வளாகத்திலும் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டிருந்தது.

மலையேறும் பக்தர்களை மலை அடிவாரத்தில் காவல்துறை, வனத்துறை, இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து மலையேற அனுமதித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!