ஆடி கிருத்திகைக்குள் சாலையை சீர் செய்ய பக்தர்கள் கோரிக்கை

ஆடி கிருத்திகைக்குள் சாலையை சீர் செய்ய பக்தர்கள் கோரிக்கை
X

சேறும் சகதியுமாக இருக்கும் வில்வாரணி முருகன் கோயில் நுழைவாயில்

போளூர் அருக உள்ள வில்வாரணி முருகன் கோயில் வாசலில் சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவில் அமைந்துள்ள வில்வாரணி முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் ஆகும், இதனை நட்சத்திர கோவில் என்றும் அழைப்பர். ஒவ்வொரு மாதமும் கிருத்திகை அன்றும் ஆடி கிருத்திகை , தை கிருத்திகை, சஷ்டி விழாக்கள் இங்கு சிறப்பாக நடைபெறும். வருகின்ற 29ஆம் தேதி ஆடி கிருத்திகை பண்டிகை இக்கோயிலில் சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் இப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வில்வாரணி முருகன் கோவில் நுழைவாயில் சேறும், சகதியுமாக இருக்கிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ரொம்ப சிரமப்படும் வகையில் உள்ளது எனவும், வண்டி வாகனங்கள் உள்ளே செல்ல ரொம்ப மோசமான நிலையில் உள்ளது எனவும் பக்தர்கள் நடந்து செல்லவும் மிக சிரமமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஆடி கிருத்திகை பண்டிகை வரவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக இந்த சாலையை சரி செய்ய வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம்

கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவிலில் எழுந்தருளும் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுயம்பு சுப்பிரமணிய சுவாமி வரும் 29ஆம் தேதி ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் சரவணன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

அப்பொழுது அவர் பேசுகையில், வரும் 29ஆம் தேதி ஆடிக்கிருத்திகை என்பதால் எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவிலில் எழுந்தருளும் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுயம்பு சுப்பிரமணிய சாமியை தரிசனம் செய்வதற்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். அதிலும் இப்பொழுது ஆடி கிருத்திகை என்பதால் பக்தர்கள் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு ஏராளமானோர் கலந்து கொள்வார்கள், அதனால் அவர்களுக்கு போதுமான அடிப்படை வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும்.

தற்போது உள்ள குடிநீர் வசதியை விட கூடுதலான குடிநீர் வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும். பக்தர்கள் கிரிவலம் வரும் சாலையில் அனைத்து மின்விளக்கு கம்பங்களிலும் மின்விளக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும்.

ஆடி கிருத்திகை பண்டிகை என்பதால் அன்னதானம் வழங்குவோர் காவல்துறையில் உரிய முன் அனுமதி பெற்று பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் அன்னதானம் வழங்க வேண்டும். இந்த ஆண்டு ஆடி கிருத்திகை பண்டிகைக்கு ஏராளமான பக்தர்கள் வர இருப்பதால் போக்குவரத்து வசதி மூலம் சிறப்பு பேருந்து வசதி, பாதுகாப்பு வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும்.

போளூர் முதல் செங்கம் செ ல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் தகுதியான இடத்தை தேர்வு செய்து தற்காலிக பேருந்து நிலையம் அமைத்துக் கொடுக்க வேண்டும்.

மேலும் பக்தர்கள் நலம் கருதி சுகாதாரத் துறை மூலம் மலை ஏறி செல்லும் வழித்தடங்களில் முன்கூட்டியே மருத்துவ முகாம் அமைக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திருக்கோயில் மற்றும் கிரிவலம் வரும் பாதைகளில் தற்காலிக கடைகள் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அமைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் இந்த ஆடிக்கிருத்திகை விழாவில் கரகாட்டம், வான வேடிக்கை, சிறப்பு நாதஸ்வரம் மேளம், போன்ற நிகழ்ச்சிகள் திருக்கோயில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே அது சம்பந்தமாககாவல்துறை மூலம் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

ஆடிக்கிருத்திகை என்பதால் பக்தர்கள் நலன் கருதி தீயணைப்பு துறை மூலம் பாதுகாப்பு அளிக்க வேண்டும், மின்சார துறை மூலம் மின் இணைப்பு துண்டிக்காமல் வழங்க வேண்டும், இதுபோன்ற அத்தனை அடிப்படை வசதிகளும் ஆடிக்கிருத்திகை திருவிழாவுக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும்

இந்த ஆண்டு நட்சத்திர கோவில் அருகாமையில் பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு உண்டான இடத்தைதேர்வு செய்து விரைவில் அமைத்துக் கொடுக்கப்படும் என்று.சரவணன் எம்எல்ஏ கூறினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர்கள், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செயல் அலுவலர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகள், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ,கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : கர்நாடகா பெண் வேட்பு மனு ஏற்கப்பட்ட சர்ச்சையால்,  பட்டியல் வெளியிட தாமதம்