திமுக ஆட்சியில் தான் வளர்ச்சிப் பணிகள் சிறப்பாக நடைபெறுகிறது : எம்.எல்.ஏ பேச்சு..!

திமுக ஆட்சியில் தான் வளர்ச்சிப் பணிகள் சிறப்பாக நடைபெறுகிறது : எம்.எல்.ஏ பேச்சு..!
X

திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த கலசப்பாக்கம் எம் எல் ஏ

கலசப்பாக்கம் பகுதியில் திமுக ஆட்சியில் தான் வளர்ச்சிப் பணிகள் சிறப்பாக நடைபெறுகிறது என எம்எல்ஏ பேசினார்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை ஆதரித்து கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது; கடந்த 20 ஆண்டு காலமாக கலசப்பாக்கம் தொகுதி மிகவும் பின் தங்கிய தொகுதியாக வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. தற்போது திமுக ஆட்சி வந்ததும் கலசப்பாக்கத்தின் மீது அதிக அக்கறை வைத்து முதலமைச்சர், நமது பொதுப்பணித்துறை அமைச்சரும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் தனி கவனம் செலுத்தி பல்வேறு வளர்ச்சி பணிகள் வழங்கி வருகிறார்கள். அதன் மூலம் கவசப்பாக்கம் தொகுதி வளர்ச்சியான தொகுதியாக தற்போது வளர்ந்து வருகிறது.

மேலும் கலசபாக்கத்தில் உள்ள மக்கள் கூறும் கோரிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் நடைபெற்று வருகிறது.

மேலும் கோவில் மாதிமங்கலம் பகுதியில் உள்ள சிவன் கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோவில் ஆகும். இந்த கோவில் நீண்ட நாட்களாக பழுதடைந்து இருந்தது.

இந்த கோவிலை முன்பு கலசப்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திருவேங்கடம் இந்த கோவிலை புணரமைப்பு கும்பாபிஷேகம் செய்தார்.

அதன் பிறகு கோவிலை யாரும் கண்டு கொள்ளவே இல்லை. தற்போது திமுக ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தீவிர முயற்சியால் ரூபாய் 41 லட்சத்தில் கோயில் புனரமைத்து கோவில் குடமுழுக்கு உண்டான பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த சிவன் கோயிலை சீரமைத்ததும் திமுக ஆட்சி தான், அதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் . மேலும் இந்த சிவன் கோவில் ராஜகோபுரம் வேண்டும் என்று முதலமைச்சர் இடம் மற்றும் பொதுப்பணி அமைச்சரிடமும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களிடமும் கேட்டுள்ளோம். விரைவில் கோவிலுக்கு ராஜகோபுரம் அமைக்கப்படும் .மேலும் பருவத மலைக்கும் உச்சியில் மக்களுக்கு குடிநீர் வசதி அமைத்து கொடுத்ததும் திமுக ஆட்சி தான்.

அதேபோல் பருவத மலைக்கு 50க்கும் மேற்பட்ட சோலார் விளக்குகளை நமது நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை அவர்கள்தான் அமைத்துக் கொடுத்தார்கள். இதை எல்லாம் நீங்கள் சிந்தித்துப் பார்த்து இது போன்ற வளர்ச்சி பணிகளை திமுக ஆட்சியில் தான் நடைபெற்று வருகிறது என்பது நீங்கள் சிந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும், என சட்டமன்ற உறுப்பினர் சரவணன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சுப்பிரமணியன், திமுக அணி அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய செயலாளர், கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture