குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை தொடங்கி வைத்த சட்டப்பேரவை துணை சபாநாயகர்

குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை தொடங்கி வைத்த சட்டப்பேரவை துணை சபாநாயகர்
X

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை துவக்கி வைத்த துணை சபாநாயகர் பிச்சாண்டி.

அரசு பள்ளியில் மாணவர்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை துணை சபாநாயகர் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட நார்த்தம்பூண்டி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மாணவர்களுக்காக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி இராமஜெயம் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை துணை சபாநாயகர் பிச்சாண்டி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது;

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய வந்த போது இந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்களும் மாணவர்களும் எங்கள் பள்ளிக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை, அதேபோல் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பறை கட்டிடம் வேண்டும் என்றும் ஒரு சில இடங்களில் கட்டிடங்கள் ஒழுகும் நிலை உள்ளது அதனால் கட்டிடங்களை பழுது பார்க்க வேண்டும் என்றும் என்னிடம் கேட்டிருந்தனர்.

அவர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் பள்ளிக்கு தேவையான புதிய பள்ளி கட்டிடம் மற்றும் கட்டிடங்கள் பழுது பார்த்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அதன் பணிகள் நிறைவு பெறும். அதே போல் மாணவர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் குடிநீர் வசதி, புதிதாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைத்து இங்கு உள்ள மாணவர்களுக்கு இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் நல்ல முறையில் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதேபோல் மாணவர்கள் வரும் பொது தேர்வில் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டும். அதற்கு தேவையான வசதிகள் என்ன வேண்டுமானாலும் என்னிடம் தாராளமாக கூறுங்கள், உங்களுக்கு செய்து கொடுப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம், ஏனென்றால் மாணவர்கள் நல்ல முறையில் படிக்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வி தான் வரும் காலங்களில் முதுகெலும்பாக இருக்கும். அதனால் மாணவர்கள் நீங்கள் நல்ல முறையில் படிக்க வேண்டும் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என மாணவர்களுக்கு துணை சபாநாயகர் அறிவுரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!