கலசப்பாக்கத்தில் வருவாய் அலுவலர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு முகாம்
கலசப்பாக்கத்தில் வருவாய் அலுவலர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
கலசப்பாக்கத்தில் வருவாய் அலுவலர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு முகாம்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்களை பாதுகாக்கும் விதமாகவும் கொரோனாவில் இருந்து மீள்வதற்கு தடுப்பூசி போடுவது பற்றியும் விழிப்புணர்வு முகாம் கலசப்பாக்கம் தாசில்தார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துணை ஆட்சியர் திரு பார்த்திபன், சிறப்புரையாற்றினார் மக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் குறிப்பாக தடுப்பூசியும் போட்டுக் கொள்ள வேண்டும், கைகளுக்கு கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும், கொரோனா நோயை எதிர் கொள்வதற்கு முக்கியமான இந்த மூன்று குறிப்புகளை பின்பற்றினால் கொரோனாவில் இருந்து இயல்பாக மீள முடியும்
அதுமட்டுமில்லாமல் கொரோனா தடுப்பூசி முகாம் ஒவ்வொரு கிராமங்களிலும் நடைபெறும் போது அங்கு உள்ள கிராம அலுவலர், உதவி அலுவலர், கட்டாயம் சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் தான் மக்கள் கொரோனா தடுப்பூசியை கண்டு பயமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள். உங்களால் செல்ல முடியவில்லை என்றாலும் தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு ஒவ்வொரு நாளும் அந்த கிராமத்தில் உள்ள மக்கள் எவ்வளவு நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் என்ற கணக்குகளை பதிவு செய்து கொள்ளவும் என்று துணை ஆட்சியர் பார்த்திபன், கூறினார்.
அத்துடன் துணை ஆட்சியர் கீதாலட்சுமி, கிராம அலுவலர்களும் உதவி அலுவலர்கள் இடமும் சிறப்புரையாற்றினார் கிராமங்களிலும் கிராம அலுவலர் கிராம உதவியாளர்கள் நீங்கள்தான் அந்த கிராமங்களில் அடையாளம். அதனால் நீங்கள் பணிபுரியும் கிராமங்களிலே இருக்கை வசதி அமைத்துக் கொண்டு அந்தந்த கிராமங்களில் நிலையாக வசித்து பணிபுரிய வேண்டும் என்று துணை ஆட்சியர் கீதாலட்சுமி, கூறினார்.
கலசப்பாக்கம் தாசில்தார் ஜெகதீசன் கிராம நிர்வாக அலுவலர்களிடமும் உதவி அலுவலர்களிடமும் உங்கள் கிராமத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் அதுமட்டுமில்லாமல் மழைக்காலங்களில் சாய்ந்து கொண்ட மரங்களையும், பழுதடைந்த மின்கம்பங்களையும், கால்வாய்கள், மற்றும் கிணறுகள், அத்துடன் அத்தியாவசிய தேவைக்கான அனைத்து வசதிகளையும் சரி இல்லை என்றால் அதை தகுந்த அலுவலர்களிடம் நாம் கூறி அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு தயாராக உள்ளோம் என்று கலசப்பாக்கம் தாசில்தார் ஜெகதீசன், கூறினார். அவர்களுடன் ஓ.ஏ.பி தாசில்தார் ராம்பிரபு, பி.டி.ஓ லட்சுமி, பி.டி.ஓ பாண்டியன், மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் கௌதம் ராம், காவல்துறை உதவி அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள் கிராம அலுவலர்கள், கிராம உதவி அலுவலர்கள், அனைவரும் சமூக இடைவெளி பின்பற்றி கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu