கலசப்பாக்கம் தொகுதியில் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய எ.வ.வே. கம்பன்
கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள கிழக்கு ஒன்றியம் மற்றும் மேற்கு ஒன்றியம் ஆகிய இரண்டு ஒன்றியங்களிலும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பொன்னி சுந்தரபாண்டியன், ஒன்றிய அவைத்தலைவர்கள் மாவட்ட பிரதிநிதிகள் நகர செயலாளர் சீனிவாசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சுந்தரபாண்டியன், ஆறுமுகம், ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில மருத்துவர் அணி துணை தலைவர் எ.வ.வே . கம்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்பொழுது அவர் பேசுகையில்
இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் திராவிட முன்னேற்ற கழகம் 1949 ஆம் ஆண்டு முதல் முதலில் துவங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இப்பொழுது 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 75 ஆம் ஆண்டு நிறைவு பெறுகிறது. இந்த 75 ஆண்டு நிறைவு விழாவையும் பவள விழாவையும் நாம் அனைவரும் அனைத்து ஒன்றியங்களிலும் அனைத்து கிளைக் கழகங்களிலும் சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும். அதேபோல் நமது திராவிட முன்னேற்ற கழகம் ஒவ்வொரு ஆண்டும் முப்பெரும் விழா மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறோம். இந்த முப்பெரும் விழா இன்னும் சிறப்பான முறையில் நாம் அனைவரும் கொண்டாட வேண்டும். என்பது நமது தலைவர் மு.க.ஸ்டாலினின் ஆசை, அதை நாம் சிறப்பான முறையில் செயல்படுத்த வேண்டும்,
அதேபோல் நமது திராவிட முன்னேற்றக் கழகத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 10 தேர்தல்களை சந்தித்துள்ளார். இந்த 10 தேர்தலிலும் எண்ணிப் பார்க்காத அளவிற்கு வெற்றியை கண்டுள்ளது. இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானங்களில் நிறைவேற்றப்பட்ட ஐந்து தீர்மானங்களும் கழகத்தின் முக்கியமான தீர்மானங்கள் முப்பெரும் விழா தீர்மானம், கழக பவள விழா தீர்மானம், கலைஞர் எனும் தாய் நூல் வெளியீட்டு விழாவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தீர்மானம், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு நன்றி சொல்லும் தீர்மானம் என ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் வரும் தேர்தலில் அனைத்திலும் திமுக உதயசூரியன் சின்னம் அபார வெற்றி பெற வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒத்துழைத்து சிறப்பான முறையில் செயல்பட வேண்டும். வரும் 2026 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளிலும் திமுக அபார வெற்றி பெற வேண்டும் . அதற்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும்,
கலசப்பாக்கம் தொகுதி கடந்த 20 ஆண்டு காலமாக எந்த ஒரு வளர்ச்சி பணியும் நடைபெறாமல் மிகவும் பின்தங்கிய தொகுதியாக இருந்து வந்தது. இப்பொழுது நடந்து முடிந்தநாடாளுமன்ற தேர்தலிலும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு காரணம் கழக நிர்வாகிகள் நீங்கள்தான். மேலும் கலசபாக்கம் தொகுதியில் உள்ள ஒன்றியங்களில் கலசபாக்கம் ஒன்றிய த்தை விட புதுப்பாளையம் ஒன்றியத்திற்கு தான் அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்து ரூ 1.27 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்துள்ளது .
இப்பொழுது நமது சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வெற்றி பெற்ற பிறகு தன் கலசப்பாக்கம் தொகுதி தன்னிறைவற்ற தொகுதியாகவும் வளர்ச்சியான தொகுதி ஆகவும் மாறி வருகிறது. அதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவும், சட்டமன்ற உறுப்பினர் சரவணனும் ,நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரையும் நானும் நீங்களும் தான் அதற்கு காரணம்.
அதை நாம் சிந்தித்துப் பார்த்து வரும் தேர்தலிலும் நாம் முழு வெற்றியை காணவேண்டும் என்று மாநில மருத்துவர் அணி துணை தலைவர் எ.வ.வே.கம்பன், சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் ,ஊராட்சி மன்றதலைவர்கள் ஒன்றிய அமைப்பாளர்கள், பேரூராட்சி நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu