படவேடு பர்வதமலை பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணி துவக்கம்

படவேடு பர்வதமலை பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணி துவக்கம்
X

புதிய சாலை பணிகளை துவக்கி வைத்த சரவணன் எம் எல் ஏ

படவேடு பர்வதமலை பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணியினை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலத்தில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 57.74 லட்சத்தில் தென்மாதிமங்கலம் கூட்டு சாலை முதல் பருவதமலை அடிவாரம் வரை சுமார் 1580 மீட்டர் தூரத்தில் புதிய சாலையை கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்ததென்மாதிமங்கலத்தில் ரூ 57.74 லட்சத்தில் புதிய சாலையை கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து பேசியதாவது,

கலசபாக்கம் தாலுகாவில் உள்ள இந்த பர்வதமலை தென்மாதிமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மல்லிகார்ஜுனேஸ்வரர் சமேத பிரம்மாம்பிகை தாயார் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த பருவதமலை கோவிலுக்கு வெளி மாநிலம், வெளிமாவட்டம், வெளி தாலுகாவில் இருந்தும் பௌர்ணமி மற்றும் முக்கிய விசேஷ நாட்கள் விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். அப்பொழுது பக்தர்கள் சாலை குன்று, குழியுமாக உள்ளது என்பதை என்னிடம் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் புதிய சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 57.74 லட்சத்தில் தென்மாதிமங்கலம் கூட்டு சாலை முதல் பருவதமலை அடிவாரம் வரை சுமார் 1580 மீட்டர் தூரம் வரை இந்த சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலையின் மூலம் மக்கள் சுலபமான முறையில் பருவதமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், கூட்டமைப்பு தலைவர் திவ்ய பிரசன்னா, அறங்காவலர் குழு தலைவர் ராமன், ஒன்றிய கவுன்சிலர் கலையரசி, ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவதி, ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், உதவி பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!