புதுப்பாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம்

புதுப்பாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம்
X

மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய ஆட்சியர்

கலசபாக்கம் அருகே புதுப்பாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் நல திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள ஓரவந்தவாடி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், வழங்கினார்.

நிகழ்ச்சியில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன், அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து நல திட்ட உதவிகளை வழங்கிய போது பேசியதாவது:

மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுக்க வேண்டும் என்றால் துறை சார்ந்த அதிகாரிகளை தேடி சென்று தான் மனுக்கள் கொடுக்கும் நிலை இருந்தது. ஆனால் இந்த மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு திட்டத்தில் மக்களை தேடி அதிகாரிகள் சென்று மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று அதை நிவர்த்தி செய்யும் திட்டம் தான் இந்த மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் . அனைத்து திட்டங்களும் மக்களை தேடி மக்கள் இல்லங்களுக்கு கிடைத்து வருகிறது . அதில் ஒன்றுதான் இந்த மக்களை தேடி முதல்வர் என்ற திட்டம்.

இந்த திட்டத்தில் கொடுக்கும் மனுக்கள் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு சென்று சரியாக 30 நாட்களுக்குள் இந்த மனுக்கள மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு மக்கள் பயன்பெற்று வருகின்றனர். அதனால் தங்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்காக மக்களும் ஆர்வத்துடன் கோரிக்கை மனுக்கள் கொத்து வருகிறார்கள். அதில் இந்த ஓரந்தவாடி, ஜப்திகாரியந்தல், நம்மியந்தல் மேல் நாச்சி பட்டு, வாசுதேவன்பட்டு , சி.கெங்கம்பட்டு, ஆகிய கிராமங்களில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் இந்த மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த திட்டத்தில் 15 துறை அதிகாரிகளின் மூலமாக நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது. அதில் 44 சேவை மையங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் சரியான முறையில் பதிவு செய்து மக்களின் தேவைகளை உணர்ந்து அவர்களின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதுதான் மக்களின் முதல்வர் என்ற திட்டம் இந்த திட்டத்தில் பல பயனிலைகளுக்கு வீட்டுமனை பட்டா, பட்டா சிட்டா மாறுதல், புதிய மின்னணு அட்டை, குடும்ப உறுப்பினர்கள் சேர்த்தல், குடும்ப உறுப்பினர்கள் நீக்கல், மற்றும் அனைத்து துறை சார்ந்த அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. இதில் நீங்கள் மனு கொடுத்து பயன்பெறுங்கள் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மக்களின் முதல்வர் என்ற திட்டத்தில் உள்ள சலுகைகள் பற்றி கூறி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, வட்டாட்சியர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா, ஒன்றிய செயலாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உ ட ன் இருந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!