கலசப்பாக்கம் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: ஆட்சியர் பங்கேற்பு

கலசப்பாக்கம் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: ஆட்சியர் பங்கேற்பு

பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் உடன் சட்டமன்ற உறுப்பினர் சரவணன்

கலசப்பாக்கம் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த, சீராம்பாளையம், தனியா ர் தி ரு மண மண்டபத்தில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம், மாவட்ட ஆட்சி யர் பாஸ்கரபாண்டியன், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட கூடுதல் திட்ட அலுவலர் மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) அண்ணாமலை வரவேற்றார்.

முகாமில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் பேசியதாவது :

தமிழக முதல்வர் எண்ணற்ற திட்டங்களை மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மக்களைதேடி சுமார் 15 துறை அதிகாரிகள் மூலமாக 44 சேவைகள் நடைபெறுகிறது. ஒரே இடத்தில் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை மனுக்களாக பெற்று மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு கண்டு நல திட்டங்களை வழங்கி வருகின்றர்.

இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பேசினார்.

முன்னதாக சரவணன் எம்.எல்.ஏ. பேசியதாவது :

தமிழ்நாடு முதல்வர் மக்களை தேடி, ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறார். இல்ல ம் தேடி கல்வி, மகளீர் உரிமை தொகை, மகளிர் கட்டணம் இல்ல பேருந்து வசதி, மாணவிகளுக்கு உயர்கல்விக்கு 1000 ரூபாய் உதவித்தொகை, மற்றும் தங்க புதல்வன் திட்டம் மூலம் மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை 1000 வழங்க திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் அனைத்து துறைகளையும் ஒரே இடத்தில் வரவழைத்து, பொதுமக்களின் மனுக்களை பெற்று, அம்மனு மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும், பொதுமக்கள் தமிழக அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பேசினார்..

இந்நிகழ்ச்சியில் மகளிர் குழுவினருக்கு நிதிஉதவி, பட்டா பெயர் மாற்றம், போன்ற நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினர்.

முகாமில் அரசு துறை உயர் அதிகாரிகள், வட்டாச்சியர் ராஜராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் வேலு, ஒன்றிய குழு தலைவர் அன்பரசி இராஜசேகரன், து ணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், வழக்கறிஞர் சுப்பிரமணியன், கூட்டமைப்பு தலைவர் வித்யா பிரசன்னா, ஒன்றிய குழு உறுப்பினர் பிச்சாண்டி, ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி புகழேந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தனி வட்டாச்சியர் முனுசாமிநன்றி கூறினார்.

Tags

Next Story