கலசப்பாக்கத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: ஆட்சியர் ஆய்வு
பயனாளிகளுக்கு பல்வேறு சான்றிதழ்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர் உடன் சரவணன் எம்எல்ஏ
கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட போளூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குப்பம் ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட போளூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனந்தபுரம், கல்பட்டு, குப்பம், கல்குப்பம் கிராமங்களை சார்ந்த பொதுமக்களுக்கு குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ள வெங்கடேஷ்வரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், பார்வையிட்டு ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் முன்னிலை வகித்தார். முகாமில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், தெரிவித்ததாவது;
போளூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குப்பம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. மக்களைத் தேடிச் சென்று அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த முகாம் நடைபெறுகிறது. நமது மாவட்டத்தில் 20,000 மக்கள் தொகை கொண்ட ஒரு பகுதிக்கு ஒரு முகாம் என்ற அடிப்படையில் முகாம்கள் நடத்தப்படுகிறது. இ ந்த முகாம்களில் பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள்.
இந்த முகாமில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்து தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியார், தெரிவித்தார்.
குப்பம் ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமில் மனு அளித்த நபர்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக 9 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும், 2 பயனாளிகளுக் கு வாரிசு சான்றுக்கான ஆணைகளையும் , தோட்டக்கலைத்துறை சார்பாக 2 பயனாளிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் வெண்டை விதையும், வேளாண்மைத்துறைசார்பாக 3 பயனாளிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் உளுந்து விதைகளையும், 2 பயனாளிகளுக் கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட் சியர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.
மேலும், முகாமில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் பதிவு செய்யப்படுவதை ஆய்வு செய்து அலுவலர்களிடம் பதிவு செய்யப்படும் மனுக்களின் விவரம் மற்றும் எண்ணிக்கைகளை கேட்டறிந்து, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியையும் , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் மருத்துவமுகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்,
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , ஒன்றிய செயலாளர்கள், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் (போளூர்), உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu