கலசப்பாக்கத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: எம்எல்ஏ பங்கேற்பு
பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய சரவணன் எம் எல் ஏ
திருவண்ணாமலை மாவட்டம் , கலசப்பாக்கம் அடுத்த, கேட்டவரம்பாளையம் ஊராட்சியில், தனியார் திருமண மண்டபத்தில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) அண்ணாமலை அனைவரையும் வரவேற்றார்.
முகாமில் கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் எம்.எல்.ஏ. பேசியதாவது :
தமிழ்நாடு முதல்வர் மக்களை தேடி, ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறார். இல்லம் தேடி கல்வி, மகளீர் உரிமை தொகை, மகளிர் கட்டணம் இல்ல பேருந்து வசதி, மாணவிகளுக்கு உயர்கல்விக்கு 1000 ரூபாய் உதவித்தொகை மற்றும் தங்க புதல்வன் திட்டம் மூலம் மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை 1000 வழங்க திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.
மக்களுடன் முதல்வர் திட்ட ம் அரசுக்கும் பொதுமக்களுக்கும் பலமாக திகழ்கிறது. அந்த வகையில் அனைத்து துறைகளையும் ஒரே இடத்தில் வரவழைத்து, பொதுமக்களின் மனுக்களை பெற்று, அம்மனு மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும், பொதுமக்கள் தமிழக அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பேசினார்.
நிகழ்ச்சியில் மகளிர் குழுவினருக்கு நிதிஉதவி, பட்டா பெயர் மாற்றம், போன்றநலதிட்ட உதவிகளை கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வழங்கினர். முடிவில் தனி வட்டாச்சியர் முனுசாமி நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில்,அரசு துறை அதிகாரிகள், வட்டாச்சியர் ராஜராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் வேலு, ஒன்றிய குழு தலைவர் அன்பரசி இராஜசேகரன், துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், வழக்கறிஞர் சுப்பிரமணியன், கூட்டமைப்பு தலைவர் வித்யா பிரசன்னா, ஊராட்சி மன்ற தலைவர் முனியாண்டி , ஒன்றிய குழு உறுப்பினர் பிச்சாண்டி, ஒன்றிய குழு தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், அரசு அலுவலர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நவீன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu