கலசபாக்கம் அருகே அரசு மகளிர் கல்லூரி: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
அரசு மகளிர் கல்லூரி அறிவிப்பை தொடர்ந்து இனிப்பு வழங்கிய எம்பி அண்ணாதுரை
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த தென்மாதிமங்கலம் ஊராட்சியில் இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட பருவதமலை கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என சட்டப் பேரவையில் முதல்வா் ஸ்டாலின் அறிவித்தாா்.
முன்னதாக, இங்கு கல்லூரி அமைக்க வேண்டுமென சட்டப் பேரவையில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கோரிக்கை விடுத்திருந்தாா். இந்த நிலையில், முதல்வரின் அறிவிப்புக்கு வரவேற்புத் தெரிவித்து, திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை தலைமையில் திமுகவினா் தென்மாதிமங்கலம் ஊராட்சியில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.
பின்னர் துரிஞ்சாபுரம் ஒன்றியம், நாயுடுமங்கலம் ஊராட்சியில் சேதமடைந்துள்ள ஊா்ப்புற நூலகத்தை எம்.பி. பாா்வையிட்டு ஆய்வு செய்ததுடன், இந்த நூலகத்துக்கு புதிய கட்டடம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu