கலசப்பாக்கத்தில் பொங்கலை முன்னிட்டு எருது விடும் விழா
எருது விடும் விழா.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் பொங்கலை முன்னிட்டு எருது விடும் விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.
அதில் எருதுகளுக்கு வண்ண வண்ண துணிகள் கட்டியும், பலூன்கள், கலர் பவுடர்கள், வர்ணங்கள் பூசி அலங்காரம் செய்து சிறப்பான முறையில் எருது விடும் விழா நடைபெற்றது.
இந்த எருது விடும் திருவிழா கலசப்பாக்கம் பகுதியில் ஆதமங்கலம் புதூர், மேல் சோழங்குப்பம், பாலூர், கடலாடி ,வீரலூர் ,கிடாம்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று முதல் தொடர்ந்து மூன்று தினங்களுக்கு எருது விடும் விழா நடைபெறும்.
இந்த விழாவில் பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு களிப்பதற்காக ஆர்வமாக வந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் கலசப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இந்த எருது விடும் விழாவில் கலந்து கொள்வர்.
அதே போல் பக்கத்து தாலுகாக்களில் இருந்தும் எருதுகளைக் கொண்டு வந்து இந்த கலசப்பாக்கம் தாலுகாவில் சிறப்பான முறையில் எருதுகளை விடுவார்கள். பாதுகாப்பு அளிக்கும் வகையில் மாவட்ட காவல் துறை மூலம் அதிகபட்சமாக காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே போல் எருது விடும் விழாவில் மக்களுக்கு எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்கு முன்னேற்பாடாக மருத்துவ முகாம்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி போன்ற அடிப்படை வசதிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
300 க்கும் மேற்பட்ட விருதுகள் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளது. இந்த திருவிழாவை கண்டுகளிப்பதற்கு 4000 க்கும் அதிகமான பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu