கலசப்பாக்கம் அருகே ரூ.5 லட்சத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க பூமி பூஜை

கலசப்பாக்கம் அருகே ரூ.5 லட்சத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க பூமி பூஜை
X

புதிய பயணியர் நிழற்குடை பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த எம்எல்ஏ சரவணன்.

கலசப்பாக்கம் அருகே ரூ.5 லட்சத்தில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்க சரவணன் எம்எல்ஏ பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள நாகா பாடி ஊராட்சியில் ரூபாய் 5 லட்சத்தில் புதிய பயணியர் நிழற்குடையை கலசப்பாக்கம் எம் எல் ஏ சரவணன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள நாகாப்பாடி ஊராட்சியில் ரூபாய் 5 லட்சத்தில் புதிய பயணியர் நிழற்குடையை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார் . நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார்.

ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல், நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஞ்சாயத்து தலைவர் சுந்தரம் அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது சட்டமன்ற உறுப்பினர் பேசியதாவது:-

புதுப்பாளையம் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய வந்த போது இந்த நாகா பாடி ஊராட்சியில் பயணியர் நிழற்குடை இல்லை , மழை மற்றும் வெயில் காலங்களில் இங்கு பேருந்தில் ஏறி இறங்குவதற்கு கஷ்டமாக உள்ளது எனவே பயணியர் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில் எனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சத்தில் புதிய பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு இப்போது பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பணிகளை விரைந்து முடித்து பயணியர் நிழற்குடை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்படும். இந்த நாகா பாடி ஊராட்சியில் அடிக்கடி பேருந்து நிற்பதில்லை என்று கூறியுள்ளீர்கள்.

இந்த பயணியர் நிழற்குடை அமைத்த உடன் பேருந்துகள் அனைத்தும் கட்டாயம் இந்த இடத்தில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்லும்.

நீங்கள் சுலபமாக பயணம் செய்யலாம். உங்கள் குறைகள் எதுவாக இருந்தாலும் என்னிடம் எப்பொழுது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம், நாங்கள் செய்ய காத்திருக்கிறோம்.

இவ்வாறு கலசப்பாக்கம் எம் எல் ஏ சரவணன் பேசினார்.

நிகழ்ச்சியில் பொறியாளர் தனவந்தன், ஒன்றிய கவுன்சிலர் முனியப்பன், பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசாங்க ஒப்பந்தக்காரர்கள் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கழக நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!