புதிய மேல்நீர் தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை!

புதிய மேல்நீர் தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை!
X

பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்த சரவணன் எம் எல் ஏ

புதுப்பாளையம் பகுதியில் புதிய மேல்நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கு பூமி பூஜை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள இறையூர் ஊராட்சியில் ரூ 14.53 லட்சத்தில் 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நீர் தேக்க தொட்டியை சரவணன் எம்எல்ஏ பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள இறையூர் ஊராட்சி சிந்தாமணிக்குளம் தெருவில் புதிய மேல்நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கு கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன், பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன், தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சரவணன் எம்எல்ஏ பணிகளை துவக்கி வைத்து பேசியதாவது;

இறையூர் ஊராட்சி சிந்தாமணிகுளம் தெருவில் புதிய மேல்நீர் தேக்கப் தொட்டி வேண்டி இப்பகுதி மக்கள் என்னிடம் கோரிக்கை வைத்தனர். அவர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் 15 வது நிதிக்குழு மானியத்தில் புதிய 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நீர் தேக்க தொட்டி அமைத்து இதன் மூலம் இப்பொகுதியில் உள்ள மக்கள் அனைவரும் பயன் பெறும் வகையில் குடிநீர் வசதி அமைத்து கொடுக்கப்படும். அதற்காக இந்த மேல்நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது.

இதில் நீங்கள் அனைவரும் பயன்பெறலாம் குடிநீர் எடுக்க வேண்டி தொலைதூரம் சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் அருகாமையில் உங்களுக்காக குடிநீர் வசதி அமைப்பதற்கு மேல்நீர் தேக்க தொட்டி அமைத்து குடிநீர் வசதி உங்களுக்காக அமைத்து கொடுக்கப்பட்டு வருகிறது விரைவில் மேல்நீர் தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும் என்று கூறி மேல்நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணியை வி ரைந் து மு டி த் து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டி என்று அதிகாரிகளுக்கும் ஒப்பந்ததாரருக்கும் சரவணன் எம்எல்ஏ அறிவுறுத்தி பேசினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பாரதிதாசன், இன்ஜினியர் சௌந்தரராஜன், ஊராட்சி மன்றதலைவர்கள் பூங்காவனம் ஜெயராஜ், சுந்தரம், அரசு ஒப்பந்ததாரர் செல்வகுமார், கிளைச் செயலாளர் பிரகலநாதன், ஊராட்சி செயலாளர் சம்பத், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ரவிபிரகாசம், மற்றும் அரசு அலுவலர்கள் ,உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story
why is ai important to the future